2025 ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிரில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7 வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
பல்வேறு நாடுகள் பங்கேற்கும் போட்டியில் இந்தியாவில் போட்டியிடும் எந்த அணிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் இருதரப்பு போட்டிகள் வேறு. சர்வதேச விளையாட்டுக்கள் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவும், உக்ரைனும் போரில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அவை பல தேசிய போட்டிகளில் இடம்பெறுகின்றன என்று விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு அனுமதி மறுப்பது, ஒலிம்பிக் விதிகளை மீறுவதாக கருதப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஹாக்கி அணி கடைசியாக 2023 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது, அப்போது அவர்கள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தனர். இது இரு நாடுகளுக்கிடையிலான நேரடி தொடராக இல்லாமல், பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டி என்பதால், பாகிஸ்தான் அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகள் மட்டும் பங்கேற்கும் தொடரில் இது பொருந்தாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா–பாகிஸ்தான் இடையே கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச ஹாக்கி போட்டிகளில் ஒலிம்பிக் விதிகளுக்கிணங்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விதிகள் மற்றும் சர்வதேச விளையாட்டு ஒப்பந்தங்களை மீறக்கூடாது என்பதே அரசின் முக்கிய நோக்கம். இந்தியாவில் நடைபெறும் பல நாடுகள் பங்கேற்கும்* போட்டிகளில் பாகிஸ்தான் உள்ளிட்ட எந்த அணிக்கும் தடையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்தியா – பாகிஸ்தான் அணிகள், 2025-ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய மற்றும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் நேருக்கு நேர் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.