இந்தியா

மீண்டும் மீண்டுமா.. டெல்லியில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் அவதி!

டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தாமதமாகியது. வியட்நாமில் எரிபொருள் நிரப்ப விமானத்தை தரையிறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

மீண்டும் மீண்டுமா.. டெல்லியில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் அவதி!
டெல்லியில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு
டெல்லியில் இருந்து வாஷிங்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI103), தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியட்நாம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜூலை 2 ஆம் தேதி புறப்பட்ட இந்த விமானம், எரிபொருள் நிரப்பும் பணிக்காக வியன்னாவில் நிறுத்தப்பட்டபோது, விமானத்தில் முக்கியமான பழுது ஏற்பட்டது குறித்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், விமானப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர். அவர்கள் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டு, ஏர் இந்தியா நிறுவனத்தால் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டன. பழுது நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், பணிகள் தாமதமாகியதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்த சம்பவம், சமீபத்தில் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான போயிங் 787 டீரிம்லைனர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னர் நிகழ்ந்த இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக அச்சத்தை ஏற்படுத்தியது. ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமை. எங்களால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரணை நடத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட விமானிகளை விசாரணை முடியும் வரை பணியில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பழுது சரி செய்யப்பட்டதும், அல்லது மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதும், பயணிகள் விரைவில் வாஷிங்டன் அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.