K U M U D A M   N E W S

திமுக

வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதைத் தடுக்க தவறிய திமுக அரசின் முகமூடி கிழிந்துள்ளது என அன்புமணி விமர்சித்துள்ளார்.

சினிமா கவர்ச்சியால் மட்டும் விஜய்யால் வெற்றி பெற முடியாது – துரை வைகோ

2026 தேர்தல் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு என துரை வைகோ தெரிவித்தார்.

டெல்லியைப் போல் தமிழகத்திலும் ஆட்சி அமைப்போம் – எல்.முருகன்

மதுரை மண்ணுக்குரிய முத்துராமலிங்க தேவரை அமித்ஷா நினைவு கூர்ந்து இருக்கிறார், நாம் அரசியலுக்காக அதை செய்யவில்லை என எல்.முருகன் பேட்டி

2026ல் திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே குறிக்கோள் – அண்ணாமலை

4 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் நிம்மதியாக இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.

திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள்.. அமித்ஷா ஆவேசம்

2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும் திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் பேசினார்.

பாஜகவுடன் கூட்டணியால் அதிமுக பலவீனப்படும்.. திருமாவளவன் எச்சரிக்கை

2026 தேர்தலுக்கு பின் அதிமுக பலவீனம் அடைந்து பாஜக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனை அதிமுகவினர் உணரவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

EPSக்கு டஃப் கொடுக்கப்போகும் முக்கியப்புள்ளி..? ஸ்கெட்ச் போட்ட திமுக தலைமை..! முறியடிக்குமா அதிமுக?

சேலத்தில் எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அதிமுக முக்கியப் புள்ளியை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாம் திமுக தலைமை. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே பிளான் போடத் தொடங்கியுள்ள திமுகவின் யுக்தி பலனளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பொய்யாக பதற்றத்தை ஏற்படுத்துகிறார்- மு.க.ஸ்டாலின் மீது எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழ் கடவுளுக்கு தமிழ்நாட்டில் தான் மாநாடு நடத்தப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகைக்கு மத்திய இணையமைச்சர் முருகன் பதிலடி

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக?

கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக-திமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.

தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிருப்தி நிர்வாகிகளில் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது அறிவாலய வட்டாரத்தில் ஆனந்தத்தை பொங்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த அதிருப்தி நிர்வாகிகளில் பட்டியல திமுக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

நீதிமன்றத்திற்கு பயந்து ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் , மதசார்பின்மைக்காக போராடியவர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கருணாநிதி பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அண்ணா பல்கலை வழக்கில் தீர்ப்பு: SIRஐ காப்பாற்றியது யார் ?- இபிஎஸ் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது தொடர் போராட்டத்தால் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழுவில் முப்படையை பாராட்டி இருக்கலாம் – தமிழிசை செளந்தரராஜன் ஆதங்கம்

நடிகர் கமலஹாசன் திமுக ஒழித்து கட்ட வேண்டும் என்று கட்சி ஆரம்பித்து, இன்று அவர்களுடன் கூட்டணி என்பது சந்தர்ப்பவாதம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படைக்கு தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம் - தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம்

நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சீட் கொடுக்காத அதிமுக..! க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக..! கூட்டணியை மாற்றும் தேமுதிக?

மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேமுதிக-விற்கு சீட் இல்லை..! 2 சீட்டையும் தூக்கிய அதிமுக..! எடப்பாடி போடும் கணக்கு என்ன?

அதிமுக வசமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டையும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி கூட்டணிக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ராஜ்யசபா சீட்டும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதால், தேமுதிகவின் நிலை என்ன? விரைவில் தெரியவரும்.

இபிஎஸ் குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.

தேமுதிகவுக்கு சீட்டு கொடுக்காத அதிமுக... திமுகவுக்கு நன்றி சொன்ன பிரேமலதா

திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடுவோம்-திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு... தேமுதிகவுக்கு 2026ல் சீட் என உறுதி

அதிமுகவின் வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவிற்கு 2026ல் ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் எனவும் உறுதி

மதுரையில் தொடங்கியது திமுக பொதுக்குழு – உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு?

இன்றைய பொதுக்குழு வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை நோக்கி திமுகவின் நகர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் ஆதரவை குறைக்கவே விஜய் திமுக அரசை விமர்சிக்கிறார் - அமைச்சர் ரகுபதி

திமுகவிற்கு பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை குறைக்கவே திமுக அரசை பா.ஜ.க C- டீமான விஜய் குறை கூறுகிறார் என்று திருச்சியில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.