ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய அவர், உயிரிழந்த ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் கொலை வழக்கை மாநில அரசு முறையாக விசாரணை செய்யவில்லை எனவும், உண்மை குற்றவாளிகளை பிடிக்காமல் போலீசார் மெத்தனமாக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நாமக்கல் மாவட்டத்தில் சாதாரண மக்களை ஏமாற்றி சிறுநீரகத் திருட்டு மற்றும் விற்பனை நடைபெறுவதாக தெரிகிறது. திமுகவை சேர்ந்த சிலர் இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மயிலாடுதுறை டி.எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ குற்றம் சாட்டப்பட்ட டி.எஸ்.பி யை சஸ்பெண்ட் செய்வது என்ன நியாயம். டி.எஸ்.பி மீது இதற்கு முன்பு எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. தமிழகத்தில் நேர்மையாக இருக்ககூடிய அரசு அதிகாரி சீருடையில் சாலையில் நடந்து சென்ற அன்றே காவல்துறை நிர்வாகம் சீர்குலைந்து விட்டது.
இரவு ரோந்து வாகனங்கள் கொடுக்காமல் போலீசார் தங்களது இருசக்கர வாகனத்தில் செல்கின்றார். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சராக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக தலையீட்டு டி.எஸ்.பிக்கு நீதியும், நியாயமும் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதிமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எந்தவித குழப்பமும் இல்லை. அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கூறியது 2026 தேர்தலுக்குப் பிறகு இருக்கலாம்” என்றார்.