'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை அருகே நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி எப்போது எல்லாம் அமைக்கிறதே அப்போது எல்லாம் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருகின்றனர்.
மின் தடை ஏற்படும் என்பது தொடர் கதை
திமுக ஆட்சி என்றால் மின் தடை ஏற்படும் என்பது தொடர் கதையாக உள்ளது. இதற்கு காரணம் ஆட்சி நிர்வாகம் கெட்டுப்போனதால் தான் என குற்றம்சாட்டினார். காவிரி கோதாவரி திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.
மேலும் 2026 தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல், விவசாயிகளுடன் சந்திப்பு என இபிஎஸ் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருகிறார்.
எடப்பாடிக்கு ஏதாவது தெரியுமா?
இந்த நிலையில் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். இதில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, காவிரி கோதாவரி திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, காவிரி கோதாவரி பற்றி சுத்தமா எடப்பாடிக்கு எதுவும் தெரியாது. உச்சநீதிமன்றத்தின் காவிரி தீர்ப்புக்கு பிறகு இதன் நிலை என்ன என்பது குறித்தும் எடப்பாடிக்கு ஏதாவது தெரியுமா? சும்மா ஏதாவது ஊர் ஊராக போய் பேசிக்கொண்டிருக்கக் கூடாது என பதில் அளித்தார்.
அந்த அளவுக்கு வந்து விட்டாரா?
எடப்பாடி பழனிசாமி, bye... bye... ஸ்டாலின் என ஹேஷ்டேங் போட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, அந்த அளவுக்கு வந்து விட்டாரா? என சிரித்தார். அன்வர் ராஜா வந்ததை தொடர்ந்து அதிமுகவினர், திமுகவுக்கு வர வாய்ப்புள்ளதாக என கூறப்படுகிறே என கேட்டதற்கு, எனக்கு தெரியாது என பதில் அளித்தார்.
சீமான் மற்றும் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, கடை விரித்த உடனே நாலு பேர் வரத்தான் செய்வான். கடையை விரித்து வைத்துக்கொண்டு யாரும் வரவில்லை என்றால், என்ன செய்வது வாங்க வாங்க சார் என்று அழைக்கத்தான் செய்வார்கள் என பதில் அளித்தார்.