அரசியல்

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்வர் ராஜா அதிரடி

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எவ்வளவோ சொல்லி பார்த்தேன், அதை எல்லாம் கேட்பதற்கு தயாராக இல்லை என்று அதிமுகவின் மூத்த தலைவரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் -  அன்வர் ராஜா அதிரடி
அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்வர் ராஜா அதிரடி!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவின் மூத்த தலைவரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். அப்போது திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, ராஜகண்ணப்பன், மெய்யநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்வர் ராஜா பேசியதாவது, இன்றைய தினம் தமிழ் இனத்தின் தலைவர் மானமுள்ள சமுதாயமாக இந்த தமிழ் சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியுடன் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தலைவர் அதுதான் தளபதி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டேன்.

அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. கருத்தியல் ரீதியாக நாங்கள் எல்லாம் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நாங்கள் எல்லாம் வாழ்ந்தவர்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து தான் அரசியலில் இருக்கிறேன். தற்போது அதற்கு புறம்பாக அதிமுக இருக்கிறது.

தனது கொள்கையில் இருந்து தடம் புரண்டு இப்போது பாஜகவின் கையில் சிக்கி இருக்கிறது. கூட்டணி எல்லாம் கிடையாது அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார். NDA கூட்டணி ஆட்சி தான் அதில் பாஜகவும் இடம் பெறும் என சொல்லிவிட்டார். ஒரு இடத்தில் இல்லை, மூன்று இடத்தில் பேட்டி அளித்திருக்கிறார். ஒரு இடத்தில் கூட அமித்ஷா அவர்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி பெயரை, இவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பத்து நாட்கள் எடப்பாடி பழனிச்சாமி, பிரச்சாரத்தை செய்து கொண்டு வருகிறார். பத்து நாளும் அவர் என்ன முயற்சித்து வருகிறார் என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார். ஆனால், நான் தான் அதிமுகவின் வேட்பாளர் என உறுதிப்படுத்தவே அவரால் முடியவில்லை என கூறினார்.

இந்த கூட்டணி பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம் அதிமுகவில் சேர்ந்தால் அதிமுகவை சீரழிக்க வேண்டும் என்பதுதான் பாஜக அதிமுக உடன் சேருகிறது. அதற்கு ஏராளமான முன் உதாரணங்கள் இருக்கிறது
எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அந்த கட்சியை அழிப்பது தான் அவர்களின் நோக்கம் அதிமுகவை அழித்துவிட்டு அதன் பிறகு திமுகவுடன் Fight செய்ய வேண்டும் என அர்ஜெண்ட Agenda. அதைத்தான் அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

NDA ஆட்சி அமைக்கும் கூட்டணி அமைக்கும் பாஜகவும் இடம்பெறும் என தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆட்சியில் பங்கு கொடுப்பவருக்கு நாங்கள் ஏமாளி அல்ல என நேற்றைய தினம் பேசி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அது ஒரு Negative Force என்று கூறினார்.

அதனை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவே, எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கட்சியை காப்பாற்ற வேண்டும் என மனதில் ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப் பார்த்தேன். அதை எல்லாம் கேட்பதற்கு தயாராக இல்லை எனவே தான் வேறு வழி இல்லாமல் அங்கிருந்து அடுத்த என்னுடைய Choice ஆகவும், அடுத்த Option ஆகவும் இருந்த திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டேன். தளபதி தலைமையில் இன்று திமுகவில் இணைந்திருக்கிறேன் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.

தமிழ்நாடு மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்றால் ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்து தான் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். 1971 ஆம் ஆண்டு கலைஞரும் எம்ஜிஆர் சேர்ந்து தேர்தலை சந்தித்ததால் தான் மிகப்பெரிய வெற்றியை அந்தத் தேர்தலை கண்டார்கள். அதற்குப் பிறகு யாருக்கு ஓட்டு அம்மா தலைமைக்கு ஓட்டு இல்லை என்றால் கலைஞர் தலைமைக்கு ஓட்டு என இருந்தது. தலைவரின் மீது மக்கள் வைத்திருக்கிற அன்பின் அடையாளமாக தான் ஆட்சி நடைபெறுகிறது.

எடப்பாடியாரா அல்லது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினா என்றால் எடப்பாடி விட 15 சதவீதம் அதிகமான வாக்குகளை பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக வருவார். அவருக்கு இணையான தலைவர்கள் அதிமுகவில் இல்லை இனிமேல் வருவார்களா என்றால் சந்தேகம் தான்.

மத்திய அரசு பாரபட்சமாக நடத்து கொண்டாலும், நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்புகளை வாங்கி இந்தியாவுக்கு உதாரணமாக இருக்கின்ற தலைவர் ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார்.

இந்த பயணத்தில் கருத்தியல் ரீதியாக பயணிப்பதற்கு என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டபோது என்னை அன்போடு வரவேற்று இணைத்துக் கொண்ட முதலமைச்சருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.