திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஆதி தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் அயோத்தி தாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசனார், ம.சி.ராசா ஆகியோரை போற்றும் வகையில் முப்பெரும் பெருவிழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் திருவள்ளூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “நாடெங்கிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடத்தி கொண்டு செல்வது சரியல்ல. இந்த வழக்கில் குற்றவாளியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என கூறுகின்றனர், தமிழகத்தில் சட்டம் இருக்கிறது, ஒழுங்கு உள்ளதா? சட்டம் யாரிடம் உள்ளது? ஒழுங்கற்ற ஒரு கூட்டத்திடம் உள்ளது. அது எப்படி சட்டம் ஒழுங்கை காப்பாற்றும். முதல் முதலாக இதுபோன்ற குற்றம் நடந்தபோதே கடும் தண்டனை கொடுத்திருந்தால், அதன்பின் பெண்களை தொடுவதற்கே பயந்திருப்பார்கள்” என்றார்.
பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக சீமான் மீது மாதர் சங்கம் புகார் அளித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மாதர் சங்கங்கள் என்மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்திருப்பதை வரவேற்கிறேன். பெண்களுக்காக எதிர்த்து போராடாதது ஏன் என கேட்ட என்னை எதிர்த்து போராடுவதை வரவேற்கிறேன். நீங்கள் எவ்வளவுதான் என்னை எதிர்த்து போராடுனாலும் என்ன கத்தினாலும் 6 சீட் தான். 90 இடத்தில் இருந்து தேய்ந்து, எங்கு இருக்கிறது என்று கூறும் அளவுக்கு தேய்ந்துள்ளீர்கள்.என்னை எதிர்த்து பேசி 6 இடத்தையாவது தக்க வைத்து கொள்ளுங்கள்” என்றார்.
காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது குறித்த கேள்விக்கு, “காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசவில்லை. அவரின் தலைவர் கருணாநிதி பேசியதை எடுத்து பேசினார். அன்று கருணாநிதி பேசும்போது, கைகட்டி வேடிக்கை பார்த்தது ஒரு சமூகம், இன்று சிவா பேசும்போது, திருப்பிகேள்வி கேட்கும் மானம் உள்ள சமூகம் கிளர்ந்து எழுந்து உள்ளது. அன்று இதுபோன்ற சமூகம் இருந்திருந்தால், அன்றோ வாயை மூடு, ஓசியில் திருவாரூரில் இருந்து வந்த நீ, என் தாத்தனுக்கு ஏசிபோட்டு கொடுத்தாயா’ என கேள்வி கேட்டிருக்கும்” என அவர் கூறினார்.