'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை அருகே நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இபிஎஸ் சுற்றுப்பயணம்
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி எப்போது எல்லாம் அமைக்கிறதே அப்போது எல்லாம் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சி என்றால் மின் தடை ஏற்படும் என்பது தொடர் கதையாக உள்ளது. இதற்கு காரணம் ஆட்சி நிர்வாகம் கெட்டுப்போனதால் தான் என குற்றம்சாட்டினார். இதேபோல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ஜூலை 24, 25ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று இலுப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோக்களில் விளம்பரங்களை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அப்போது அங்கிருந்த பெண்களுக்கு டீ வாங்கி கொடுத்தார்.
சர்ப்ரைஸ் செய்த முன்னாள் அமைச்சர்
அப்போது அங்கிருந்து ஒரு பெண்மணி எனக்கு நீங்க டீ போட்டு குடுங்க அப்படின்னு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்த டீக்கடையில் தானே டீ போட்டு கொடுத்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சர்ப்ரைஸ் செய்தார்.
பின்னர் அங்கிருந்த பூக்கடை, பழக்கடை, மளிகை கடைகளுக்கு, பொதுமக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுகவினர் உள்ளிட்ட ஏராளமான பெண்கள், பொதுமக்கள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.