வேலூர்மாவட்டம், காட்பாடி காந்தி நகர் பகுதியில் ரூ.85.54 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கூட்டுறவு நகரமைப்பு சங்க கட்டிடம் மற்றும் ரூ.1. 42 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முழு நேர நூலகம் ஆகியவைகள் திறக்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அண்ணா படிக்காத புத்தகங்களே கிடையாது
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து விழாவில் பேசுகையில், “இரண்டு கட்டிடங்களை திறந்துள்ளேன். நூலகத்தையும் திறந்தேன். என் வாழ்நாளில் எத்தனையோ இடங்களை திறந்துள்ளேன். பள்ளி கூடங்களையும் திறந்துள்ளேன். ஆனால் அவற்றில் ஏற்படாத மகிழ்ச்சி நூலகத்தை திறக்கும் போது ஏற்பட்டது. காரணம், நூலகம் மனிதனை அறிவாளி ஆக்குகிறது. படிக்காதவனை நல்லமனிதனாக்காது படிப்பு.
படிப்பு என்பது காலா காலத்திற்கும் தொடரும். அறிஞர் அண்ணா படிக்காத புத்தகங்களே கிடையாது. கன்னிமேரி நூலகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் அவை அண்ணா படித்தவைகள் தான். வேலூர் சிறைசாலையில் 4 மாதங்கள் அண்ணா இருந்தார். அப்போது நூலகத்தில் பழைய புத்தகங்களை படித்தார்.
நமக்கு கண்ணை திறப்பது வாசகசாலை தான்.
அதே போல் வீட்டிலிருந்தாலும் வண்டியில் போனாலும் புத்தகங்களை படிப்பார். ரயிலில் செல்வார் அண்ணா. காரணம் தொந்தரவு இல்லாமல் புத்தகங்களை படிக்க, ஆகவே படிப்பும் காரணத்தை நாங்களும் உணர்ந்திருக்கிறோம்.என்னை பொறுத்தவரையில் 5 நிமிட சாமியார் மாதிரி உட்கார முடியாது. எதையாவது படித்தால் என்னால் உட்கார முடியும். துணி, நகை வைத்தால் எங்கே வைப்பது என்பதை பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. நான் அதிக அளவு புத்தகங்களை வைத்துள்ளேன். காரணம் நமக்கு கண்ணை திறப்பது வாசகசாலை தான். ஏற்கனவே இருந்த நூலகம் பழுதடைந்தது. இதனை தற்போது திறந்தோம்.
நீங்கள் எத்தனையோ கதைகள் பேசலாம்.ஆனால் ஒரு மணி நேரம் இரண்டு மணிநேரம் நூலகம் வந்து படித்தால், மனிதன் அறிவுள்ளவனாக மாறுவான். இன்னும் நூலகங்களை எல்லா இடங்களிலும் கட்ட வேண்டும். 10 பஞ்சாயத்திற்கு நடுவே ஒரு நூலகம் கட்டினால் மக்கள் பயன்பெறுவார்கள். அதற்கும் நாம் முயற்சி செய்ய வேண்டும்” என பேசினார்.