K U M U D A M   N E W S

தமிழ்நாடு

கேள்வி எழுப்பிய ஜனாதிபதி.. கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்..! என்ன காரணம்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு, தீர்மானிக்கப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் 'குடியரசுத் தலைவருக்கு' தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சூடுபிடித்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு!

TASMAC மேலாண் இயக்குநர் வீடு மற்றும் SNJ அலுவலக மேலாளர் வீடு என சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பணம் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டென்று மாறிய வானிலை: 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனடிப்படையில் இன்று தமிழகத்தில், தர்மபுரி, வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வீட்டு வரி உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

கடந்த சில நாட்களாக பேருந்து கட்டணம், வீட்டு வரி ஆகியன உயர்த்தப்பட உள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

வெளியானது பத்தாம் வகுப்பு ரிசல்ட்- அசத்திய சிவகங்கை மாவட்டம்

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மாவுக்கட்டு.. 'அது எப்படின்ணே' - பாயிண்ட்ட புடிச்ச நீதிமன்றம்!

தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூல்.. மன உளைச்சலில் வாடிக்கையாளர்.. நுகர்வோர் ஆணையம் போட்ட பலே உத்தரவு

இனிப்புக்கு கூடுதலாக 25 ரூபாய் வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த வழக்கு... நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோட்டரி சங்கத்தின் கோல்டன் ஸ்பேரோ கார்னிவல்... ஏராளமான பெண்கள் உற்காசத்துடன் பங்கேற்பு!

ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் நடைப்பெற்ற கோல்டன் ஸ்பேரோ கார்னிவல் நிகழ்வில், ஏராளமான பெண்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களது திறமையினை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

127-வது உதகை மலர் கண்காட்சி.. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த முதலமைச்சர்!

உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

நெல்லுக்கான ஆதாரவிலை: மற்ற மாநிலங்களை பாருங்க.. முதல்வருக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Test news

Test newsTest news

Gold Rate Today: ஆஹா.. ஒருவழியா குறையத் தொடங்கியது தங்கம் விலை

கடந்த ஓரிரு மாதமாகவே தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.1560 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் தங்கத்தின் விலையானது, கிராமுக்கு ரூ.8,800-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதலாக நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

4 ஆயிரம் பிரசவம்.. ஏழைகளிடம் பணம் வாங்குறதே இல்லை- கவனம் ஈர்க்கும் டாக்டர் பார்வதி

ஆடம்பர கிளினிக், மெடிக்கல், ஸ்கேன் சென்டர், குறுக்கு நெடுக்கே நடக்கும் நர்ஸ்கள் எவரும் இல்லை. பழைய குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்கிறார். வீட்டு ஹால்தான் கிளினிக். டாக்டர் பார்வதி என்றாலே எளிதாக வீட்டை அடையாளம் காட்டிவிடுகின்றனர் பொறையார் மக்கள்.

துணைவேந்தர்கள் நியமனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pollachi case : பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக-வின் பங்கு என்னவென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையில் உறங்கும் நபர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது!

சென்னையில் சாலையில் படுத்து உறங்கும் நபர்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ரோட்டரி சார்பில் கோல்டன் ஸ்பேரோ கார்னிவல்- திரளாக பங்கேற்ற பெண்கள்!

ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் நடைப்பெற்ற கோல்டன் ஸ்பேரோ கார்னிவல் நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்று தங்களது திறமையினை வெளிப்படுத்தினர்.

பொய் கூறுவதையே எடப்பாடி பழனிசாமி வேலையாக வைத்துள்ளார் - முதலமைச்சர் விமர்சனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறுவதையே வேலையாக கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

17 வருஷமா குழந்தை இல்லையா? பெண்ணை நூதனமாக ஏமாற்றிய மந்திரவாதி

Witchcraft Arrest in Chennai : 17 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி 5 சவரன் தங்க நகையினை திருடிய மாந்திரீக மந்திரவாதியினை அதிரடியாக கைது செய்துள்ளது காவல்துறை.

காதலியிடம் வீடியோ காலில் பேசி வந்த நண்பன்.. போதை ஊசி செலுத்தி கொலை

தன் காதலியிடம் நண்பன் வீடியோ காலில் பேசி வந்ததால் ஆத்திரம் அடைந்த காதலன், நண்பனை மதுப்போதையில் போதை ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? போக்சோவில் கைதான ஆட்டோ டிரைவர்

ஆட்டோவில் தொடர்ந்து பயணம் செய்து வந்த மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 34 மருத்துவக் கல்லூரிகளுக்கு NMC நோட்டீஸ்!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு குறித்து உரிய விளக்கம் அளிக்க 34 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.