மதுரையில தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடானது நேற்று நடந்தது. அந்த மாநாட்டில் ஆறு தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது. அந்த ஆறு தீர்மானத்தில் முதல் தீர்மானம் பரந்தூர் விவசாய நிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் கட்டும் முடிவு கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தவெக மாநாட்டில் தீர்மானம்
குறிப்பாக அந்தத் தீர்மானத்தில, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக 5,746 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தவும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருட கணக்கில் போராடிவரும் எளிய மக்களின் போராட்டத்தை நசுக்கவும், பலவந்தமாக அவர்கள் நிலங்களைப் பறிக்கவும், பல வழிகளிலும் தொடர்ந்து திமுக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
மேலும் கையகப்படுத்தப்படும் பகுதிகளில் 13 வற்றாத நீர்நிலைகள் உள்ளது. இந்த நீர் நிலைகள் அழிக்கப்பட்டால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதே போன்று, பருவமழை காலங்களில் சென்னையில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது.
ஆட்சி அதிகாரம்
இந்த விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய மாநில அரசுகள் கைவிட வேண்டும், இதற்குப் பதிலாக விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை விமான நிலையத்திற்கு தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழக வெற்றிக்கழகம் தன் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் சட்ட ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும்.
அதோடு எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கை வைக்கும் எந்த அரசும் அதே எளிய மக்களினால் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி வீசப்படும் என்பதை இந்தத் தீர்மானத்தின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறோம் என்று நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விஜய்க்கு நன்றி
இந்த நிலையில, பரந்தூர் பசுமை வழி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் இந்தத் தீர்மானத்தை வரவேற்கும் வகையில் விஜய்க்கு நன்றி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் “தாங்கள் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதியான செயல்பாட்டுக்கும் துணை நிற்கின்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், வருங்கால தமிழகத்தை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்கின்ற, மாசற்ற தலைவருக்குப் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்புக் குழுவின் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குவதோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களின்போது ஆரம்ப காலத்திலிருந்து தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம், தனது சிறப்புமிகு உரையால் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும்.
விவசாய பெருங்குடி மக்களை மக்களைக் காப்பாற்ற வேண்டும். மண் மண் பலத்தையும், நீர் வளத்தையும், காக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்ற, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிய தலைவரும், தமிழக வெற்றிக்கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் கோடான கோடி நன்றி என்று பரந்தூர் பசுமை வெளி விமான திட்ட எதிர்ப்பு குழுவினர்” தெரிவித்துள்ளனர்.