காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்.. திடீர்னு நடந்த ட்விஸ்ட்

Kanchipuram Mayor Mahalakshmi Yuvraj : காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் மகாலட்சுமி யுவராஜூக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Jul 29, 2024 - 10:31
Jul 29, 2024 - 13:16
 0
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்.. திடீர்னு நடந்த ட்விஸ்ட்
Kanchipuram Mayor Mahalakshmi Yuvraj

Kanchipuram Mayor Mahalakshmi Yuvraj : கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த ஒரு மாதமாகவே பரபரப்பான சூழ்நிலை எழுந்துள்ளது. மேயர் மகாலட்சுமி யுவராஜூக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தினர். மேயரை பதவி நீக்க கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் கவுன்சிலர்கள் அனைவரும் சுற்றுலா கிளம்பியதால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
 
காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, தமாகா, சுயேச்சை என மொத்தம் 51 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில், திமுக சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராகவும், காங்கிரஸ் கட்சியின் குமரகுருபரன் துணை மேயராகவும் பதவி வகித்து வருகிறார்கள்.மேயராக பதவி ஏற்றதிலிருந்து, மகாலட்சுமி யுவராஜூக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தற்பொழுது காஞ்சிபுரத்தின் துணை மேயராக உள்ளார். துணை மேயர் தரப்புக்கும் மற்றும் மேயர் தரப்பிற்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.  அதே போன்று மாநகராட்சி கூட்டங்களின்போது, பலமுறை சலசலப்பு போராட்டங்களும் நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில்தான் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக 33 கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 

மேயரின் கணவர் யுவராஜ் பண வசூலில் ஈடுபடுகிறார் என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.பாதாள சாக்கடை பணி, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்ய முடியவில்லை எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத்திட்டம் மேற்கொள்ள அனுமதி கிடைத்தது. அதற்கான ஒப்பந்த புள்ளி தலைமை சொல்லும் நபருக்கு கிடைத்துள்ளதாகவும் இதன் மூலம் மேயர் மகாலட்சுமிக்கு பெரிய அளவில் தொகை கிடைத்துள்ளதாகவும் அதனை வைத்து கிழக்கு கடற்கரை சாலையில் பங்களா, போரூரில் வீடு, வையூரில் பல ஏக்கர் நிலம்,ஆகியவற்றை வாங்கியதாக புகார் கூறியுள்ளனர் கவுன்சிலர்கள்.

ஒவ்வொரு முறையும் மாமன்ற கூட்டம் நடைபெற்ற போதும் சலசலப்பு ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாகும். திமுக தலைமை கழகம் சார்பில், அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அத்துடன், திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, அமைச்சர் கே.என் நேரு  ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது... ஆனாலும் இவைகளில் எதிலுமே சுமூக முடிவும் எட்டப்படவிலை..

இன்று 29ஆம் தேதி திங்கட்கிழமை, மேயர் மகாலட்சுமி யுவராஜூவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது.. திமுக மேயருக்கு எதிரான நிலையில், 35 கவுன்சிலர்கள் மற்றும் மேயர் தரப்பு கவுன்சிலர்கள் 10 பேரும், காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுலாவுக்கு கிளம்பி சென்றுள்ளனர்.

திமுக மேயரை பதவி நீக்கம் செய்ய 5ல் 4 பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 41 பேர் மேயருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே மேயரை பதவி நீக்கம் செய்ய முடியும். இப்படிப்பட்ட சூழலில், 2 தரப்பிலுமே கவுன்சிலர்களும் சுற்றுலா சென்றுள்ளதால், இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாத கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா? மேயர் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பினை கவுன்சிலர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று மேயருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான தோல்வியடைந்தது. இதனையடுத்து மேயர் மகாலட்சுமி யுவராஜின் தலை தம்பியது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow