பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து.. 2 மாணவர்கள் உயிரிழப்பு!
கடலூரில் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் பலர் படுகாயம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.