திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐஓசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்ற ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில் சேவைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ரயில் சேவை முடங்கியுள்ளது. ரயில் சேவை பாதிப்பால் திருவள்ளூரிலிருந்து சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்ட்ரலில் இருந்து காலை 5:50 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக அவசர உதவிக்காக சென்னை சென்ட்ரலில் அவசர சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாஸா பெருமாள் மற்றும் ஆட்சியர் பிரதாப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பிரதாப், “ஐஓசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தீ விபத்துக்குள்ளானது. இந்த ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது அதிகாலை 5.20 மணிக்க தீப்பிடித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.