இந்தியா

மீண்டும் மீண்டும் காரை ஏற்றிய கொடூரன்…ஜம்மு காஷ்மீர் சம்பவத்தால் அதிர்ச்சி

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்

மீண்டும் மீண்டும் காரை ஏற்றிய கொடூரன்…ஜம்மு காஷ்மீர் சம்பவத்தால் அதிர்ச்சி
வயதான நபர் மீது மீண்டும் மீண்டும் காரை ஏற்றிய நபர்
ஜம்மு காஷ்மீர், காந்திநகர் பகுதியில் நேற்று நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வயதான நபர் மீது இளைஞர் ஓட்டி வந்த கார் மோதியதில் கீழே விழுந்தார்.

கார் ஏற்றி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்

விபத்தை ஏற்படுத்திய இளைஞர், உடனடியாக உதவி செய்யாமல், மனசாட்சியற்ற முறையில் மீண்டும் காரை பின்னோக்கி எடுத்து, கீழே விழுந்தவரின் மீது ஏற்றியது காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.இந்த சம்பவம் காந்திநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



விபத்துக்குள்ளான முதியவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.