சபரிமலை ஐயப்பன் கோயில், இன்று (ஜூலை 29) இரவு நடை திறக்கப்படுகிறது. இந்த நடை திறப்பு, 'நிறைபுத்தரிசி பூஜை'யை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக நாளுக்குள் பூஜை பொதுவாக, ‘நிறைபுத்தரிசி பூஜை’ ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டில் பருவநிலை மாற்றத்தால் ஆலப்புழா மாவட்டத்தில் நெற்பயிர்கள் திடீரென அறுவடைக்கு தயாராகி விட்டன. இதன் காரணமாக, வழக்கத்தைவிட முன்பே பூஜையை நடத்துவதற்கு தேவசம் வாரியம் முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்க மாதத்தில் கேரளாவின் பெரிய பண்டிகையான ஓணம் கொண்டாடப்படுகிறது. ஓணத்திற்கு முன்பாகச் சபரிமலை உள்ளிட்ட கேரளாவில் உள்ள பல கோயில்களில் சுவாமிக்கு நெற்கதிர்களை படைத்து வழிபாடு நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு நன்றாக விளைந்த நெற்கதிர்களை நிறைபுத்தரி (நிறையும் புது அரிசி) என்று அழைக்கின்றனர். இந்தப் பூஜையில் வைத்துப் பிரசாதமாக வழங்கப்படும் நெற்கதிர்களை வீட்டில் வைத்துப் பாதுகாத்து வந்தால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
புதிதாக அறுவடையான நெல் அரிசியுடன் ஐயப்பன் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். இது பச்சை அறுசுவையை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் ஒரு நன்றிக்கடன் முறையாகப் பார்க்கப்படுகிறது.
நடை திறக்கப்படும் இன்று இரவு முதல், ஜூலை 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களில் பக்தர்கள் ஆன்லைன் பதிவின் மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் முன்னமே ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்குரிய நேரத்தில் கோயில் வருகை தர அனுமதி வழங்கப்படும்.
சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் வரக்கூடிய சாத்தியமுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறை, வனத்துறை மற்றும் தேவசம் வாரிய அதிகாரிகள் இணைந்து நெருக்கடியைத் தவிர்க்க முழுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். மறுநாள் (30-ந் தேதி) நிறைபுத்தரிசி பூஜை வழிபாடுகள் நடைபெறும். இதற்காகப் பாரம்பரிய முறைப்படி பாலக்காடு, கொல்லம் பகுதிகளிலிருந்து ஐயப்ப சேவா சங்கத்தினர் நெற்கதிர் கட்டுகளைச் சபரிமலைக்கு தலைச்சுமையாக எடுத்து வருவார்கள்.
இதேபோல் சபரிமலையில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்களும் அறுவடை செய்யப்பட்டு கோவிலில் வைத்துச் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். பின்னர் அவை பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப்படும். நிறைபுத்தரிசி பூஜை வழிபாட்டுக்குப் பிறகு அன்றைய தினம் இரவு 10 மணிக்குக் கோவில் நடை சாத்தப்படுகிறது.