தமிழ்நாடு

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்த தீயை அழைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு | A major accident was averted as the fire department quickly responded to the fire

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரைத்தளத்தில் 20 படுக்கைகளைக்கொண்ட HDU என்ற உயர் சார்பு பிரிவில் இரண்டு நாட்களாக நோயாளிகள் யாரும் இல்லாமல் இருந்துள்ளது.

திடீரென தீ விபத்து

இந்நிலையில் இரண்டு நாட்களாக அந்த பிரிவில் உள்ள ஒரு வெண்டிலேட்டர் இயந்திரம் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்துள்ளது.அதனை ஊழியர்கள் ஆஃப் செய்யாமல் இருந்துள்ளனர்.

இரண்டு நாட்களாகத்தொடர்ந்து இயங்கி வந்த வெண்டிலேட்டர், நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அந்த வார்டு பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக அந்த கட்டிடத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மருத்துவமனையில் மற்ற வார்டுகளில் உள்ள நோயாளிகள் கடும் பயத்தில் இருந்தனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் டீன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.வெண்டிலேட்டர் கருவி தீப்பற்றி எரிந்து அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.