தமிழ்நாடு

திருவண்ணாமலையில் பாலத்தில் கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி…3 பேர் படுகாயம்

பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் பாலத்தில் கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி…3 பேர் படுகாயம்
திருவண்ணாமலை அருகே பாலத்தில் இருந்து கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து
பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் அவரது மகன் மஞ்சுநாத், மனைவி மாதவி, அவரது உறவினர் தர்மன் ஆகிய நான்கு பேரும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து தண்டலம் பகுதியில் உள்ள வராஹி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு பெங்களூரில் இருந்து கிளம்பி திருவண்ணாமலை வழியாக செஞ்சி நோக்கி சென்றுள்ளனர்.

பாலத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

மேலும் மாருதி ஸ்விப்ட் வாகனத்தை மஞ்சுநாத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை திருவண்ணாமலை அடுத்த மலபாம்பாடி கிராமம் அருகே சென்றபோது தூக்க கலக்கத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி பாலத்துக்கு குழே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேலாயுதம் (52) சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் மஞ்சுநாத், அவரது தாய் மாதவி உறவினர் தர்மன் ஆகியோர் படுகாயங்களுடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பெண்ணாத்தூர் போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்தில் உயிரிழந்த வேலாயுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கீழ்பெண்ணாத்தூர் போலீசார் விபத்து நடந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.