K U M U D A M   N E W S

"தமிழ்நாட்டை வஞ்சிப்பது பாஜகவின் வாடிக்கை": ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.

சென்னையில் பரபரப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா உட்படப் பலரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா மற்றும் எஸ்.வி. சேகர் ஆகியோரின் வீடுகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தியாவின் மிகப் பணக்காரப் பெண்மணி... ஹுருன் தரவரிசையில் ரோஷ்னி நாடார் 3-வது இடம் பெற்று சாதனை!

HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

திமுக ஒன்றிய செயலாளர் மீது ரூ.85 லட்சம் மோசடி புகார்: நண்பர் எஸ்பி அலுவலகத்தில் மனு!

தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கரூர் சோகத்துக்கு தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - வைகோ குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!

மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

நடிகர் விஜய்க்காகப் பால் விநியோகத்தை தடுத்த போலீஸ் - நடவடிக்கை எடுக்கக் கோரி பால் முகவர்கள் சங்கம் புகார்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் நாமக்கல் வருகையையொட்டி, பால் விநியோகம் செய்யச் சென்ற பால் முகவர் சங்க நிர்வாகியைத் தடுத்து நிறுத்தி, மிரட்டிய போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

விளம்பர மோகம் தலைக்கேறிய விடியா அரசு வீழும் காலம் நெருங்கிவிட்டது - நயினார் நாகேந்திரன்!

சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மருது அழகுராஜுக்கு முக்கிய பொறுப்பு – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்

நல்லவர்கள் யாரும் காங்கிரசை விமர்சிக்க மாட்டார்கள்- செல்வப்பெருந்தகை

அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள இபிஎஸ் காங்கிரஸ் தலைவர்களிடம் வந்தால் சொல்லிக்கொடுப்போம் என செல்வப்பெருந்தகை கருத்து

திமுக கூட்டணி அரசு பல மாநிலங்களுக்கு முன் மாதிரி அரசாக இருக்கிறது- திருமாவளவன்

பல மாநிலங்கள் பின்பற்ற கூடிய அளவிற்கு திமுக தலைமையிலான கூட்டணி சாதனை படைக்கும் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்: “தமிழிசை கருத்து சரிதான்” – நயினார் நாகேந்திரன்

திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

“உலகின் மிகப்பெரிய செல்வம் கல்வி” – நடிகர் சிவகார்த்திகேயன்

எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம் என நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

கரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்- வெறிச்சொடி காணப்பட்ட இருக்கைகள்

குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் அன்பரசன் பெருமிதம்!

புத்தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். அக். 9 மற்றும் 10 தேதிகளில் கோவையில் நடக்கும் உலகப் புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

செங்கோட்டையன் விரும்பினால் சந்திப்பேன் – ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்ற டிடிவி தினகரன் கருத்துக்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்து மத நம்பிக்கைகளை தகர்க்க திமுக தீர்மானம் – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

இந்து மதம், இந்து பக்தியோடு யாரும் இருக்கக்கூடாது என திமுக நினைக்கிறது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்

அக்டோபரில் வடகிழக்கு பருவமழை: பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க வாய்க்கால்கள் தூர்வாருதல், சாலைகள் சீரமைப்பு மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!

எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் உடல் உறுப்புகளை திருட ஆரம்பித்துவிட்டனர் – இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சி அமைந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

“சிலர் எழுதிக்கொடுப்பதை தவறாக பேசுகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி

தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சசிகலா அணிக்கு அதிர்ச்சி: தீவிர ஆதரவாளர் வெண்மதி திடீர் விலகல்.. காரணம் என்ன?

அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது நெருங்கிய ஆதரவாளரான வெண்மதி, சசிகலாவின் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.