அரசியல்

மருது அழகுராஜுக்கு முக்கிய பொறுப்பு – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்

 மருது அழகுராஜுக்கு முக்கிய பொறுப்பு – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
அதிமுகவில் இருந்து விலகு சமீபத்தில் திமுகவில் இணைந்த மருது அழகு ராஜுக்கு பொறுப்பு
அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த மருது அழகுராஜுக்கு, திமுக செய்தித் தொடர்பாளர் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மருது அழகுராஜுக்கு பொறுப்பு

அதிமுகவில் எழுத்தாளராவும் பேச்சாளராகவும், முக்கியப் பொறுப்புகளிலும் இருந்த மருது அழகுராஜ், சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் இணைந்த உடனேயே திமுக செய்தித் தொடர்பாளர் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மருது அழகுராஜ் திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

அதேபோல் அண்மையில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கோவை கார்த்திக்கு தீர்மானக் குழுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 10 மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் திமுக தலைமையிடம் உள்ளதாகவும், கட்சிப் பணிகளில் அலட்சியமாக இருப்பவர்களை நீக்கும் முடிவில் திமுக தலைமை உள்ளதாகவும் கூறப்படுகிறது.