டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்தபோது எங்களை கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அண்ணாமலையின் முயற்சியால் என்.டி.ஏ கூட்டணி அமமுக வந்தது. அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொள்வோம். நான் மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார். அவசரப்பட வேண்டாம் என்று சொன்னார்.
செங்கோட்டையனை சந்திப்பேன்
என்னைப் பொறுத்தவரை பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது. எங்களின் நலன் விரும்பிகள் நாங்கள் எதிர்பார்க்கிற மாற்றம் வரும் என்று சொன்னார்கள். அதற்காக தான் காத்திருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன், டி.டி.வி.தினகரனை ரகசியமாகச் சந்தித்ததாக வந்த தகவலையடுத்து, அ.தி.மு.க.வில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "அ.தி.மு.க. மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் ஒருவேளை விரும்பினால், அவரை நான் சந்திப்பேன்," என்று தெரிவித்தார்.
டிடிவி தினகரன் கருத்துக்கு வரவேற்பு
இது அ.தி.மு.க.வின் பிளவுபட்ட தலைவர்களிடையே மீண்டும் ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது.
மேலும், அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், "எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன்," என்று சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கு ஓ.பி.எஸ். வரவேற்பு தெரிவித்தார். "டி.டி.வி. தினகரனின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியான ஒன்று. அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது," என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
தேர்தலுக்கு பிறகு தெரியும்
மேலும், விஜய்க்கு தேவையில்லாமல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலுக்கு பிறகே வாக்குகளாக மாறுமா? என்பது தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.