K U M U D A M   N E W S
Promotional Banner

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்வர் ராஜா அதிரடி

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எவ்வளவோ சொல்லி பார்த்தேன், அதை எல்லாம் கேட்பதற்கு தயாராக இல்லை என்று அதிமுகவின் மூத்த தலைவரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் - நயினார் நாகேந்திரன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும், அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார்களோ அதன் படி கேட்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது- அண்ணாமலை பேட்டி

“அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தாய் தந்தைக்கு இணையாக பாசம்.. அன்பு அண்ணனை இழந்து விட்டேன்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்” என்று மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது- சீமான் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறை காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

குற்றம் சாட்டியவர்களையே பணிநீக்கம் செய்யும் திமுக அரசு- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதோடு, அவ்வாறு குற்றம் சாட்டியவர்களையே திமுக அரசு பணிநீக்கம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

காவலர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - முதல்வர்

பொதுமக்களிடம் காவல் துறையினர் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

இலங்கைத் தமிழர் திருமணப் பதிவுக்கு ஏற்பாடு.. தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய, தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ம் தேதி சனி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: TRF-ஐ அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அறிவித்தது அமெரிக்கா!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

வீடு, வீடாக சென்று பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப மாட்டார்கள்- தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக- அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாது, கூட்டணி ஆட்சி குறித்து பெரிய தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும்- சிபிஎம் வலியுறுத்தல்

நீதிமன்ற தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கப்படும் நிலையில், மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

தொழிலதிபர்களின் முகவரா திமுக அரசு? அன்புமணி கேள்வி

பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தொழிலதிபர்களின் முகவராக திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பேனா சிலைக்கு நிதி, வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்திற்கு இல்லையா?- நயினார் நாகேந்திரன் கேள்வி

விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட கண்டுகொள்ளாது, மேடைகளில் மட்டும் "நானும் டெல்டாக்காரன் தான்" என்று முழங்கும் விளம்பர மாடல் ஆட்சி என நயினார் நாகேந்திரன் விமர்சனம்

மனிதர்களை கடிக்கத் திமுகவினர் துணிந்துவிட்டனரா? டிடிவி தினகரன் கேள்வி

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக கூட்டணி வலுவிழந்துள்ளது- தமிழிசை சௌந்தரராஜன்

திமுக கூட்டணி வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

‘கமிஷன், கலெக்சன்’.. திமுகவின் தாரக மந்திரம்- இபிஎஸ் விமர்சனம்

“கமிஷன், கலெக்சன் மட்டும்தான் திமுகவின் தாரக மந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சியில் எல்லாவற்றையும் திருடுவார்கள்…நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுக ஆட்சியில் கிட்னியும் திருடுவார்கள், எல்லாவற்றையும் திருடுவார்கள் என நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளியை ஏமாற்றி கிட்னி திருடிய சம்பவம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்

காமராஜரை பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது – சசிகாந்த் செந்தில் எம்.பி.

காமராஜரை பற்றி பேசுவதற்கு தான் உட்பட யாருக்கும் அருகதை கிடையாது என திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மம்…திருச்சி சிவாவுக்கு இபிஎஸ் கண்டனம்

இவரே வெடிகுண்டு வைப்பாராம். இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின் என இபிஎஸ் விமர்சனம்

பா.ம.க-வுடன் அ.தி.மு.க கூட்டணியா? -ராமதாஸ் பாணியில் முன்னாள் அமைச்சர் பதில்

விசிக அதிமுக கூட்டணியில் இணைந்து பயணித்தது தான் என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்

காமராஜர் விவகாரம்: சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என காமராஜர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது - முதலமைச்சர் விமர்சனம்!

தனது குடும்பத்தைக் காப்பாற்றவே, மத்திய அமைச்சர் அமித்ஷா வீட்டின் கதவை எடப்பாடி பழனிசாமி தட்டியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அரசு சொத்தை ஆக்கிரமிக்க முயற்சி- பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் ஓட்டம் பிடித்த திமுக பிரமுகர்

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்ய வந்த தி.மு.கவை சேர்ந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் அங்கு இருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.