K U M U D A M   N E W S

“ரொம்ப SORRY மா..” அஜித்குமார் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர்..!

போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் தாயாரிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.

திருப்புவனத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் – 5 காவலர்களுக்கு நீதிமன்ற காவல்

திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில், ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்குப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன்... 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

எலான் மஸ்க் நல்ல பையன்தான் - டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மிகவும் நல்லவர் அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் "மசோதா"வுக்கு எதிராக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. ஜூலை 3 வரை இலங்கை நீதிமன்ற காவல்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா பாணியில் விஜய்…தவெகவினருக்கு ஆனந்த் போட்ட உத்தரவு

2026ல் சட்டமன்றம் எங்கள் கையில் இருக்கும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

2 மகன்களை கொன்ற கொடூர தந்தை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மது போதையில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு: திமுக MP ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், குற்றச்சாட்டுப் பதிவும் வழக்கின் விசாரணையும் வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. போலீசார் தீவிர விசாரணை!

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தீவிர அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. கணவன் செய்த கொடூரம்!

கர்நாடகாவில் மனைவி தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

நெல் ஜெயராமன் மறைவின் போது தந்த வாக்குறுதி.. சொன்ன சொல் மாறாத SK!

”நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார்” என மனம் நெகிழ்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.

'தக் லைஃப்' பட விவகாரம்.. கமலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருத்து

கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது எனவும், திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய பெண் கைது - வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை

8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் சிறுமியை தாக்கிய பெண் கைது

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு – ஜூலை 14-ல் விசாரணக்கு ஆஜராக உத்தரவு!

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஜூலை14- ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடக்கம்!

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சோனியாகாந்தி திடீர் மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ்.. கணவன் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவன் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததாகவும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் மூதாட்டி மற்றும் பேரன் மீது தாக்குதல் – 2 பேர் கைது!

சென்னையில் இரவு நேரத்தில், வயதான மூதாட்டி மற்றும் அவரது பேரனை தாக்கிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் நகர செயலாளர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

அதிமுக முன்னாள் நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நகை திருடிய போலி டாக்டர்.. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பு!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலி டாக்டர் நோயாளியின் தங்க நகைகளை திருடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர் போலவே ஸ்டெதஸ் கோப் அணிந்து கொண்டு நோயாளிகளிடம் கைவரிசை காட்டியுள்ளார்.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து கணவர் போட்ட ஸ்கெட்ச்.. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்த வெளிநாட்டில் இருந்து கூலிப்படையை ஏவிவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கட்டையால் தாக்கி கொலை செய்த கணவர்...நாடகமாடியது அம்பலம்

தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து அம்மா உயிரிழந்ததாக கூறி பிள்ளைகளை ஏமாற்றிய தந்தை கைது