இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்று இரண்டு அணிகளும் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர் பும்ராவும், இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரும் களமிறங்க உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுமாறி வரும் கருண் நாயர், தனது முதல்தர ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பவுலிங்கில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக பும்ரா இன்றைய போட்டியில் களம்காண்கிறார். கருண் நாயர் தொடர்ந்து சொதப்பி வரும் இன்றைய போட்டியில் அவர் பார்முக்கு திரும்பினால் ஆட்டம் சூடிபிடிக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆல்-ரவுண்டர்களான ஜடேஜா, சுந்தர், நிதீஷ் ரெட்டி ப்ளேயிங் லெவனில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அவர் விளையாடப்போகும் முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் இந்த் டெஸ்ட் போட்டியில், தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், 2 வது வெற்றிக்காக இரண்டு அணிகளும் அதிரடியாக விளையாடுவார்கள் என்பதால் இன்று தொடங்கும் டெஸ்ட்டில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகிய சேனல்களில் நேரலையில் காணலாம்.
இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் வீரர்கள்
இந்தியா : ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், அபிமன்யு ஈஸ்வரன், நித்திஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.