K U M U D A M   N E W S

இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா வெற்றி செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பூக்குழி திருவிழா கொடியேற்றம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

ஸ்ரீவில்லிபுத்தூரில்  பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நிகழ்ச்சியான இன்று கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சென்னையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்- நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு

பாதிக்கப்பட்ட  சிறுமியின் தாய் தரப்பில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

செல்போனால் வந்த வினை...  இரண்டரை வயது சிறுவனுக்கு நேர்ந்த வேதனை

சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில்  அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ். எஸ். சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வணங்கினர்.

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் - கிரிஷ் ஜோடன்கர் கருத்து

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடன்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

மன்னாதர் சுவாமி சமேத பச்சை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

500 ஆண்டுகள்  பழமை வாய்ந்த மன்னாதர் சுவாமி சமேத பச்சை அம்மன் திருக்கோவிலில் ஜீரணோதாரண ரஜபந்தன, அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவானது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதிமுகவா? தவெகவா?.. முட்டிமோதும் தந்தை மகன்?.. தைலாபுர கூட்டணி கணக்கு என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாசுக்கும் - அன்புமணிக்கும் இடையே மீண்டும் வாதம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

நெஞ்சுவலி காரணமாக ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சுவலி காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி

வட மாநில தொழிலாளர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்து.. காவல் துறையினர் விசாரணை

இருசக்கர வாகனத்தில் சென்ற வட மாநில தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழா..  மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த ஓடிய காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

"சீமானை விடப்போவதில்லை" - நடிகை திட்டவட்டம்

தானும் உச்சநீதிமன்றத்தை நாடி உண்மையை வெளிக்கொண்டு வருவேன் என்றும் நடிகை திட்டவட்டம்

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. ராஜேந்திர பாலாஜி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்சம் பெற்ற வழக்கு: மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறை..!

நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைத்து காட்ட 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

"நாங்கள் வைத்த கோரிக்கை எதுவும் வரவில்லை.." - ஆதங்கத்துடன் பேசிய டெல்டா விவசாயி

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.142 கோடி

மாசாணி அம்மன் கோயில் நிதியில் ரிசார்ட்? பின்வாங்கியது தமிழக அரசு

மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து ஊட்டியில் ரெசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Bike Accident | பைக்கில் சென்ற போது கொடி கம்பத்தால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எங்கே போறாங்க..என்பதை கவனமாக பாருங்கள் என சென்னையில் நடந்த விபத்தில் அக்கா மகனை இழந்தவர் உருக்கமாக கோரிக்கை

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு ரத்து செய்த நீதிமன்றம்..!

முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில்  கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

NLC விவகாரம் - பொதுமக்கள் எதிர்ப்பு.. கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று..!

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு.. நாதக பேரணிக்கு அனுமதிக்கொடுத்து ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்..!

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு இனிவரும் காலங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்கான கட்டணத்தை  நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இபிஎஸ்-க்கு எதிராக தயாநிதி மாறன் தாக்கல் செய்த வழக்கு.. இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோதமாக நிதி பெற்ற வழக்கு... ஜவாஹிருல்லா தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி பெற்றது தொடர்பான வழக்கில், மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரினவாதத்திற்கு உதாரணமாக உள்ளது.. திமுகவை கடுமையாக விமர்சித்த நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களில் இருந்து '₹' சின்னம் நீக்கப்பட்ட நிலையில் இந்த செயல், மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.