K U M U D A M   N E W S

நீதிமன்றமே முடிவெடுக்கும் என்றால் சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்கு? - சீமான் கேள்வி!

ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றத்தின் தலையீடு குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாடாளுமன்றம், சட்டமன்றம் எதற்கு?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம்: கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்!

முதலமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி முதலீடுகளை ஈர்த்து, தனது பயணத்தை விமர்சித்தவர்களுக்குக் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.

சட்டம்- ஒழுங்கு டிஜிபி வெங்கடராமன் பொறுப்பேற்பு: நேரில் வாழ்த்து தெரிவித்த சென்னை காவல் ஆணையர்!

தமிழக காவல்துறையின் பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை ரோபோ உற்பத்தி மையமாக மாற்றத் திட்டம்.. ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ்.. முகேஷ் அம்பானி அறிவிப்பு!

இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோ உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில், ரிலையன்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.

அனிருத் இசை நிகழ்ச்சிக்கு சிக்கல்- விசிக எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் மனு

கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்குத் தடை கேட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை- உச்சநீதிமன்றம்

தெருநாய்களை பிடித்துக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கிற்கு தடையில்லை-சென்னை உயர்நீதிமன்றம்

இபிஎஸ்க்கு எதிராக வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது

ஆசியக் கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு! கேப்டனாகச் சூர்யகுமார் யாதவ் நியமனம்!

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக, சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாகச் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிங்கு சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல் துறை பொய் வழக்கு போடுகிறார்கள்- வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு

திருந்தி வாழ்ந்து வருவதாகவும், காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு

உதவிக்கு யாரும் வராததால் விரக்தி..உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச்சென்ற கணவர்

நாக்பூரில் உதவி கேட்டு யாரும் வராத விரக்தியில் இறந்த மனைவியின் உடலை கணவர் பைக்கில் கொண்டு சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்த தீயை அழைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு | A major accident was averted as the fire department quickly responded to the fire

அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவிற்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்....பிரகாசமாக காட்சியளித்த காமாட்சி அம்மன்

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஆன அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சி அம்மனை ஏராளமான ரசிகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆளுநர் இல. கணேசனுக்கு தலையில் காயம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை!

நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும்- பா.ம.க வழக்கறிஞர் பாலு பேட்டி

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் நாளைச் சட்டப்படி எதிர்கொள்வோம் எனப் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடி கட்டணங்களுக்கு 4 வாரங்கள் தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

சுங்கச்சாவடிகளில் நான்கு வாரங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்க தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்கள் பிரச்சினையைத் தீர்க்காமல் மன்னர் - இளவரசர்போல் செயல்படுவதா? - வானதி சீனிவாசன் விமர்சனம்!

அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

யார் உண்மையான இந்தியர்? உச்சநீதிமன்றத்தை சாடிய பிரியங்கா காந்தி!

யார் உண்மையான இந்தியர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் பணி அல்ல எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சாடியுள்ளார்.

சவுதி அரேபியாவில் தொடரும் மரண தண்டனைகள்: ஒரே நாளில் 8 பேருக்கு நிறைவேற்றம்!

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு நேற்று ஒரேநாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்.. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!

எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.