சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்படப் பல அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், மூப்பனார் எளிமையும், நேர்மையும் கொண்ட ஒரு தேசியத் தலைவர் என்று புகழாரம் சூட்டினார். "ஆளுமைமிக்க மூப்பனார் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் பிரதமராக வேண்டிய வாய்ப்பு உருவானது. ஆனால், அவரை ஆதரிக்காமல், அந்த வாய்ப்பைத் தடுத்த சக்தி யார் என்பது நமக்குத் தெரியும்" என்று கூறினார்.
"தமிழ், தமிழ் கலாச்சாரம் என்று பேசுகிறவர்கள், ஒரு தமிழர் பிரதமராகும் வாய்ப்பை ஆதரிக்காமல் தடுத்தனர். இதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. இது தமிழகத்திற்கு நடந்த மிகப்பெரிய துரோகம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
2026-ல் மாற்றம் தேவை
மேலும், அவர், "நான் இங்கு அரசியல் பேச வரவில்லை, இருப்பினும் ஒரு சிறிய அரசியலைப் பேசுகிறேன்" என்று கூறி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தினார். "தமிழக மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கிறார்கள், அதை அவர்களுக்கு வழங்குவது நமது பொறுப்பு. போதைப்பொருள் மற்றும் சாராயம் பெருகிவரும் இந்தச் சூழலில், அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும்" என அழைப்பு விடுத்தார்.
"கூட்டணியில் உள்ள முதிர்ச்சியும், பக்குவமும் கொண்ட தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே நல்லாட்சியை நிறுவ முடியும். அதுவே மூப்பனாருக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலியாக இருக்கும்," என நிர்மலா சீதாராமன் பேசினார்.