சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜெரினா பேகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது கணவர் மரணம் அடைந்து விட்டார் எனது மகள் திருமணத்திற்கு வாங்கிய நகைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை
இது தொடர்பாக அடுத்த நாள் சென்னை சூலைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரில் 92 சவரன் நகை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை நகையை மீட்க எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை.
பின்னர் 2019 மற்றும் 2021 ஆண்டுகளில் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தேன். அந்த மனுவை திருவல்லிக்கேணி துணை ஆணையர்க்கு அனுப்பியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைத்தது. நான் பல முறை சூலைமேடு காவல் நிலையம் மற்றும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போதும் எந்த தகவலும் இல்லை. இதுவரை குற்றவாளி கைது செய்யபடவில்லை நகையை மீட்கவும் இல்லை. காவல்துறை தனது கடமையை செய்ய தவறிவிட்டது. சுமார் கடந்த 8 ஆண்டுகளாக நகையை மீட்க எந்த நடவடிக்கையும் சூலைமேடு காவல்துறை எடுக்கவில்லை எனவே வழக்கை சிபிசிஐடி விசாரணை மாற்ற வேண்டும் என மனுவில் கோரினார்.
நீதிபதி எச்சரிக்கை
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.முகமது சபீத், நகையை மீட்பது தொடர்பாக காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
கடந்த 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை சூலைமேடு காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரகினர்.அப்போது நீதிபதி குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக முறையாக பயிற்சியை காவல்துறையினருக்கு அரசு வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு முறையாக பயிற்சி இல்லமால் இருக்கும் கடமையை செய்ய தவறிய காவல் அதிகாரிகளை நீதிமன்றம் வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, குற்றம் நடைபெற்ற காலத்திற்கு பிறகு சூளைமேட்டில் அதிக காலம் ஆய்வாளராக பணியாற்றி தற்போது சென்னை சென்ட்ரல் இரயில்வே இரும்பு பாதை உதவி ஆணையர் பணியாற்றி வரும் கர்ணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு உத்தரவிட்டர். மற்றும் 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை பணியாற்றிய மற்றும் பணியாற்றும் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பிக்கு உத்தரவிட்டார்.
இதே போன்று சேலம் மாவட்டம் வீராணம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தவணை முறையில் வீட்டுமனை வழங்குவதாக அளிக்க பட்ட புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆய்வாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரிய வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. 2018 முதல் தற்போது வரை வீராணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி இருந்தனர். பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, குற்ற வழக்கு பதிவு செய்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த காவல் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பிக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.