பீகார் மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பீகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.67 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள்
இதுதொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ ஆரம்பத்தில் இருந்தே பீகார் மாநிலத்தில் அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். தற்போது ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை மாதக் கட்டணத்தில் இருந்தே அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் 1.67 கோடி குடும்பங்கள் பீகாரில் பயனடைவார்கள்.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து வீடுகள் மற்றும் பொது இடங்களில் சூரிய மின்சார வசதி நிறுவ முடிவு செய்துள்ளோம். ஏழை குடும்பங்களின் சூரிய மின்சார வசதி அமைக்கும் முழு செலவையும் மாநில அரசே ஏற்கும், மீத உள்ளவர்கள் தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் சூரிய மின் உற்பத்தி சுமார் 10,000 மெகாவாட் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
பீகார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் நிதிஷ்குமாரின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆட்சி முடியும் நிலையில், தேர்தலை முன்வைத்து நிதிஷ்குமார் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
அரசுத்துறை வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பீகாரில் நிரந்தரமாக வசித்து வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிட்த்தக்கது.