சினிமா

ஐடி ஊழியருடன் பிக்பாஸ் வின்னர் ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்!

கபாலி, மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை ரித்விகா ஐடி ஊழியரை மணக்க உள்ளார்.

ஐடி ஊழியருடன் பிக்பாஸ் வின்னர் ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்!
Bigg Boss Winner Riythvika to Marry IT Employee Soon
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதுகளையும் வென்றார். மெட்ராஸ் படத்தினைத் தொடர்ந்து ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்றார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் “பிக்பாஸ் 2” வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பட்டத்தை வென்றும் அசத்தினார். இந்த நிலையில், நடிகை ரித்விகாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. திருச்சியை சேர்ந்த ஐடி ஊழியர் வினோத் லக்‌ஷ்மண் என்பவரை ரித்விகா மணக்க உள்ளார். இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ரித்விகா - வினோத் லக்‌ஷ்மண் நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்று உள்ளார்கள். ரித்விகா - வினோத் லக்‌ஷ்மண் இடையேயான திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரித்விகா- வினோத் லக்‌ஷ்மண் இடையே நடைப்பெற்ற நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை ரித்விகாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.