சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் தாமோதரன்(49), என்பவர் வழக்கறிஞராகத் தொழில் செய்து வருகிறார். தாமோதரனுக்கு அறிமுகமான தேவகுமார் என்பவருக்குச் சொந்தமாகக் கொட்டிவாக்கத்தில் உள்ள சுமார் 16 கிரவுண்ட் பூர்விக சொத்து அரசு நிலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தச் சொத்தினை மீட்டு, விற்பனை செய்து தருமாறு தேவகுமார், தாமோதரனிடம் உதவி கேட்டுள்ளார். உடனே தமோதரன், அறிமுகமான நண்பர்கள் சிலர் மூலம் கோடம்பாக்கத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் அருண் (எ) பெருமாள் என்பவரை அணுகியபோது, அவர் சொத்தினை அரசிடமிருந்து மீட்டு தருவதற்கு பணம் ரூ.1 கோடிவரை செலவாகும் எனக் கூறியுள்ளார்.
கோடம்பாக்கத்தில் தனியார் மேன்பவர் ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்து அதன் மூலம் பல அரசு ஒப்பந்தங்களைச் செய்து வருவதாகவும் இதனால் பல அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் தெரியும் எனக் கூறியும் நம்ப வைத்ததாகத் தாமோதரன் கூறியுள்ளார் பல அரசியல்வாதிகளையும் தனக்குத் தெரியும் எனக் கூறி அரசு தரப்பில் காரியங்களை முடித்துத் தருவதாக ஆசை வார்த்தை காட்டி உள்ளார்.
இதனையடுத்து தாமோதரன் கடந்த 2024ம் ஆண்டு முன்பணமாக ரூ.62.8 இலட்சத்தை, கோடம்பாக்கம் அலுவலகத்தில் வைத்து அருண் (எ) பெருமாள் என்பவரிடம் கொடுத்துள்ளார். சொத்தினை மீட்பது தொடர்பாகக் கேட்கும் பொழுதெல்லாம் தலைமைச் செயலகத்தில் இருக்கிறேன் எனக் கூறி நம்ப வைத்த, அருண் வாய்மொழி ஒப்பந்தத்தின் படி நடந்து கொள்ளாததால் ஏமாற்றப்பட்ட தாமோதரன் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.
அதற்கு அருண் ரூ.62.8 இலட்சத்திற்கு காசோலை கொடுத்துள்ளார். காசோலை வாங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாததால், காசோலை திரும்பியுள்ளது. எனவே ஏமாற்றிய அருண் பணத்தை மீட்டு தரும்படி தமோதரன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கோடம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட அருண் (எ) பெருமாள் (51) தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தன்னை கண்டுபிடிக்காமல் இருக்க பல்வேறு செல்போன் எண்களைப் பயன்படுத்தி வந்த அருண், தன் பெயரில் சில போலி நிறுவனங்களை வைத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அருண் வங்கி இஎம்ஐ பணத்தில் வாங்கிய கார் பயன்படுத்தி வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது தொடர்ந்து வங்கியில் இஎம்ஐ செலுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து வங்கி இஎம்ஐ எங்கிருந்து செலுத்துகிறாரெனச் சைபர் க்ரைம் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருந்த அருணை கோடம்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை செய்தபோது பலரிடமும் இதே போன்று அரசு தரப்பு காரியங்களை நிறைவேற்றித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.இதனை அடுத்து மோசடியில் வாங்கிய காரைப் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அருண் (எ) பெருமாள் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.