உலகம்

எலான் மஸ்க் நல்ல பையன்தான் - டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மிகவும் நல்லவர் அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் "மசோதா"வுக்கு எதிராக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் நல்ல பையன்தான் - டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு
எலான் மஸ்க் நல்ல பையன்தான் - டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலகின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர் எலான் மஸ்க் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. எக்ஸ் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ட்ரம்பின் சில நடவடிக்கைகள் குறித்து கடந்த காலங்களில் விமர்சனங்களும் தெரிவித்து வருகிறார்.

எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, எலான் மஸ்க் சிறந்த மனிதர். அவர் சிறப்பாக செயல்பட கூடியவர் என டிரம்ப் பதில் அளித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி குறைப்பு, அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்துவதற்காக 'பெரிய அழகான வரி' என்ற பெயரில் கொண்டு வந்த மசோதா நேற்று செனட்டில் விவாதம் மற்றும் திருத்தங்களுக்கு அனுமதிக்கும் நடைமுறை ஓட்டெடுப்பில் இரு ஓட்டுகளில் தேர்வானது.

இந்த நிலையில், ட்ரம்ப் தனது அண்மைய பேட்டியில் மஸ்க் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். “மஸ்க் மிகவும் நல்லவர்தான். அவர் ஒரு அறிவாளி. ஆனால் அவரிடம் நான் அதிகம் நேரத்தில் பேசவில்லை. அவர் எனது ஜனாதிபதி தேர்தலின்போது எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதை நான் மறக்கமாட்டேன். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அவரிடம் சிறிது வருத்தம் காணப்பட்டது. அதுதான் எனக்கு தவறாக இருந்தது. அது சரியான அணுகுமுறையாக இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதே பேட்டியில் ட்ரம்ப் மேலும் கூறியதாவது, “மஸ்க் உலகில் மிக முக்கியமான தொழில்நுட்ப மனிதர்களில் ஒருவர். ஆனால், அரசியல் துறையில் பல மாறுபாடுகள் இருக்கும். ஒருவரது ஆதரவு முக்கியம்தான், ஆனால் அதன் பின்னணியையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

எலான் மஸ்க் தனது எக்ஸ் (X) சமூக ஊடக தளத்தின் வாயிலாக அரசியல், தொழில்நுட்பம், சுதந்திரம் போன்ற பல முக்கிய தலைப்புகளில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அவரது இந்த கருத்துக்கள் சில நேரங்களில் மிக கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

மஸ்க் குறித்து ட்ரம்ப் நேர்மறையாக கருத்து தெரிவித்ததனால், இருவருக்கும் இடையிலான உறவுகள் மீண்டும் மென்மையடையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.