K U M U D A M   N E W S
Promotional Banner

டிரம்பின் புதிய வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் விரிசல் ஏற்படுமா?

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் திடீர் மாற்றம்.. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% வரி ஒத்திவைப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்த 25% இறக்குமதி வரி, ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இரட்டை நிலைப்பாடு.. உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீதுள்ள தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது.

காப்பர், மருந்து பொருட்கள் மீது வரிவிதிப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காப்பர் (தாமிரம்) இறக்குமதியில் 50% வரியும், மருந்து பொருட்கள் இறக்குமதியில் 200% வரியும் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க் நல்ல பையன்தான் - டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மிகவும் நல்லவர் அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் "மசோதா"வுக்கு எதிராக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை தொந்தரவு செய்யும் டிரம்ப்... ஆப்பிள் CEO-விடம் டிரம்ப் பேசியது என்ன?

கத்தார் தலைநகர் டோகாவில் நடந்த ஒரு வணிக நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உடனான உரையாடலின் போது, இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று கோரியதாக தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.