K U M U D A M   N E W S

டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கு.. திரும்ப பெற்ற எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவின் கருப்பு, வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவை பயன்படுத்த டி.டி.வி தினகரனுக்கு தடை விதிக்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற்றுக் கொண்டார். வழக்கு வாபஸ் பெற்றதை அடுத்து டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

"பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி" கும்பிடு போட்ட மாஜிக்கள்..! அதிமுக-வில் மேலும் ஒரு விரிசல்...?

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாஜிக்கள் சிலர் அதிமுகவை விட்டு விலக உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பாஜகவுடன் கூட்டணி...மே.2-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு

மே.2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மீண்டும் இபிஎஸ் பெயரை தவிர்த்த கே.ஏ.செங்கோட்டையன்...கோபியில் நடந்த நிகழ்ச்சியில் பரபரப்பு

நமது பகுதி மேன்மேலும் வளர வேண்டும் என்ற வாழ்த்துகளையும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முனைப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அதிமுக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது- முதலமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி

"தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக மீது சவாரி செய்ய தான் பாஜக கூட்டணி அமைத்துள்ளது- திருமாவளவன்

கூட்டணி இல்லை என்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சக்தியே இல்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிடுவார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்- இபிஎஸ்ஸை விமர்சித்த முதலமைச்சர்

இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்

பிரிவினைவாத திமுகவை வீழ்த்துவது முக்கியமானது – பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.

இபிஎஸ் அமைத்த கூட்டணி…அதிமுக ஆனந்தத்தில் மிதக்கிறது - கே.டி.ராஜேந்திரபாலாஜி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விழி பிதுங்கி பதறிப்போய் இருக்கிறது திமுக கூட்டம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

மீண்டும் N.D.A கூட்டணியில் அதிமுக- பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்

குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இல்லாத ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

கூட்டணி உறுதியான கையோடு அமித்ஷாவிற்கு ஸ்பெஷல் விருந்தளிக்கும் எடப்பாடி!

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவிற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி–அமித்ஷா அறிவிப்பு

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்- செல்லூர் ராஜு

தேர்தலுக்கு முன்பாக கூட கூட்டணி அமையும், அதெல்லாம் தேர்தல் வியூகம் என்றும், 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு...இபிஎஸ் கண்டனம்

விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அனைத்துக்கட்சி கூட்டம்:அதிமுக பங்கேற்காது- இபிஎஸ் அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு நடத்தும் நாடகம் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு புகாரில் ஒன்றுமில்லை...இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.

பதாகை ஏந்திய அதிமுக உறுப்பினர்கள்... சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்ற சபாநாயகர்!

சட்டப்பேரவையில் பதாகை ஏந்தியதாக அதிமுக உறுப்பினர்கள், கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அந்த உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற்றார்.

டாஸ்மாக் விவகாரம்: திமுகவுக்கு ஏன் அச்சம் – இபிஎஸ் சரமாரி கேள்வி

டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பசுமை துளிரும் அதிமுக கைகுலுக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ்?

இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்படுவார்களாக என் ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கட்சி நடத்தியவர் இபிஎஸ் | Cm Stalin About Admk EPS

காலம் காலமாக இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் கட்சி திமுக - முதலமைச்சர் ஸ்டாலின்

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் – எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்

சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின்  மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்

திமுக ஆட்சியில் நாளை உயிருடன் இருப்போமா என்று தெரியாது - இபிஎஸ் கடும் விமர்சனம்

2021 தேர்தலில் திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டது. 15 அறிவிப்புக்கு தான் நிறைவேற்றி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சரண்டர் விடுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தியதாக தவறான தகவலை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளனர்.

பூத் வாரியாக சோதனை செய்ய வேண்டும்...இல்லையென்றால் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போடுவார்கள்.. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அ.தி.மு.க ஆட்சியில் நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை தற்பொழுது தி.மு.கவிற்கு மட்டுமே வேலை செய்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு