விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் அதிமுக சார்பில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவிற்கு கூட்டணி வலிமையாக இருக்கலாம்.ஆனால் அதிமுகவிற்கு மக்கள் வலிமையாக உள்ளனர்.
கூட்டணியை நம்பி திமுக உள்ளது
கூட்டணியை நம்பி திமுக உள்ளது. வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.மக்கள் தான் ஆட்சி அமைக்கக்கூடிய ஆயுதம். அவர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். திமுக என்ன கனவு கண்டாலும் பலிக்காது. 2011 முதல் 2021 வரை சிறப்பான ஆட்சியைக் கொடுத்தது அதிமுக. இந்த நான்கு ஆண்டு ஆட்சியில் மக்களின் எதிர்ப்பைத் திமுக சம்பாதித்துள்ளது.
மக்கள் முழுவதுமாகத் திமுக ஆட்சியில் அதிருப்தி உள்ளனர். எப்போது தேர்தல் வரும் எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சந்தி சிரித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் எனச் சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டது. இத்தனை ஆண்டு திமுக ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையாவது கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியா? எதிர்க்கட்சியா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. ஆணவக்கொலை குறித்து அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் என்று சொல்லக்கூடியவர்கள் ஸ்டாலினிடம் கேட்டுப் பேசுகிறார்கள்.
கொள்கை வேறு, கூட்டணி வேறு
திமுகவிற்கு எதிராகக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், மக்கள் பிரச்னைக்குத் திமுகவை எதிர்த்துக் கம்யூனிஸ்ட் கட்சி பேசுவது கிடையாது. திமுகவிடம் அனுமதி வாங்கித்தான் திமுக கூட்டணி கட்சிகள் பேசுகின்றனர். அதே நேரத்தில் கொள்கை இருப்பதால் தான் அதிமுகவை அசைக்க முடியவில்லையென முத்தரசனுக்கு பதிலடி கொடுத்தார். பாஜகவும், அதிமுகவும் ஒரே கொள்கையா எனக் கேட்கிறார்கள். கொள்கை வேறு, கூட்டணி வேறு.
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியைத் திமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது.எங்களைப் பற்றி விமர்சனம் செய்தால், உங்களைப் பற்றி விமர்சனம் செய்ததற்கு நிறைய இருக்கின்றது. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் கருத்துக்களை சொல்கின்றோம். திமுகவோட கூட்டணி அமைத்தபிறகு கம்யூனிஸ்ட் கட்சியைத் திமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டு செல்கிறது என்பதை சொல்லிக் கொள்கிறோம்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
விலைவாசி உயர்வு உள்ளிட்டவைக்காக ஏதாவது கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தியதா? நான் முதலமைச்சராக இருந்தபோது தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துப் போராட்டம் நடத்தி வந்தார்கள்.அப்பொழுது ஸ்டாலின் தூய்மைப் பணியாளரிடத்திலே சென்று உங்களுடைய கோரிக்கைகளைத் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். தூய்மை பணியாளர்களுக்குக் கோரிக்கையை நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டீர்கள். ஆனால் தற்போது தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திமுகவினர் ஒருவராவது அந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக நேரிலேயே பார்த்துப் பேசியது உண்டா எனக் கேள்வி எழுப்பினார்.
மக்கள் மனதில் நீங்கள் செல்வாக்கை இழந்து விடுவீர்கள். தேர்தல் நேரத்திலே உங்களுடைய கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும் என்பதை எச்சரிக்கிறேன் எனத் திமுகவை கடுமையாகச் சாடி பேசினார்.