நீலகிரி மாவட்டம், உதகையில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” பிரசார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஏடிசி பகுதியில் பரப்பரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து உதகை தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வந்து இப்பகுதி மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
திமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை
மேலும், அதிமுக ஆட்சியில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான, நவீன அறுவை சிகிச்சைகளுடன் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தோம். ஆனால் திமுக அதனை திறந்து வைத்துவிட்டு போய்விட்டார்கள். அதிமுக ஆட்சியில் 50 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், உதகை அரசு மருத்துவக்கல்லூரியை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வகையில் திறந்து வைத்தவர் மு.க.ஸ்டாலின்.
உதகை என்று சொன்னாலே சுற்றுலா நகரம். தமிழகம் மட்டுமல்ல வெளி மாநிலங்கள் மட்டுமல்ல உலக அளவில் பிரசித்தி பெற்றது உதகை நகரம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த உடனே நீதிமன்றம் என்ற பெயரில் குறிப்பிட்ட அளவிலேயே வாகனங்கள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தவுடன் இங்கு உள்ள வியாபாரிகளுக்கு வருவாய் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை விடியா திமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாழ்வாதாரம் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஊழல் செய்தது
பசுந்தேயிலைக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய விலை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். படுகர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத இந்த திமுக அரசு எந்தெந்த தொழிலில் கொள்ளையடிக்கலாம் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டு வருகின்றனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிமுக ஆட்சியில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் எந்த விலை உயர்வு ஏற்படுகிறதோ எங்க கொள்முதல் செய்யப்படுகிறதோ அந்த பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அங்கேயே சென்று கொள்முதல் செய்து ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்த வந்த ஆட்சி அதிமுக ஆட்சி.
தைப்பொங்கலுக்கு பிரம்மாண்டமான பொங்கல் தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 21 பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. முறையாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதிலும் ஊழல் செய்தது திமுக அரசு.
சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்
பொங்கல் தொகுப்பிலும் ஊழல் செய்த திமுக அரசு தொடர வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு தான் ஏழை எளிய மக்களை வாழவைத்தது. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் வீட்டை கனவில் வேண்டும் என்றால் கட்டி மகிழ்ந்து கொள்ளலாம். நிஜத்தில் வீடு கட்ட முடியாது. திமுக ஆட்சியில் ஒரு யூனிட் எம் சாண்ட் 5500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு யூனிட் ஜல்லி 4500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
திமுக குவாரி உரிமையாளர்களை திட்டமிட்டு மிரட்டி வருகிறார்கள். திமுக அரசு லஞ்சம் கேட்பதாலே கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டார்களோ அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.கருணாநிதி குடும்பம் நாட்டிலேயே செல்வந்தர்களாக உயர்ந்து விட்டார்கள். தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகளை பயிரிடும் விவசாயிகள் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். இது அதிமுகவின் தேர்தல் அறிக்கை. ஏழை எளிய மக்களை வாழவைக்கும் அரசாங்கமாக அதிமுக அரசு அமையும்.
அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்புகளை வழங்கியது அதிமுக அரசு. திமுக அரசு அதனை நிறுத்திவிட்டது. 52 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு திறமையான மாணவர்களாக உயர்த்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் மாணவர் செல்வங்களுக்கு லேப்டாப்புகளை வழங்கி திறமையான மாணவர்களாக உருவாக்க வழங்கப்படும். மருத்துவ கல்வி பயிலும் ஏழை, எளிய மக்களுக்கு இடஒதுக்கீடு செய்து மருத்துவக்கல்லூரி பயின்று வருகின்றனர். இது அதிமுக ஆட்சியில் சாதனை.
இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கடன் வாங்குவதற்காகவே குழு அமைத்தது மு க ஸ்டாலின். ஸ்டாலின் வாங்கிய கடன்களை மக்கள் நாம்தான் கட்ட வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அரசாங்கம் தேவையா என சிந்திக்க வேண்டும்
திமுக, அதிமுக என மாறி மாறி 73 ஆண்டுகள் ஆட்சிகள் நடந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 5,32,000 கோடி கடனாக உயர்ந்துள்ளது. மக்களுக்கு எதுவும் செய்யாமல் பணம் எங்கே சென்றது என்பது மக்களுக்கு தெரியும். கடனைப் பெற்று மக்களை கடன்காரங்களாக மாற்றியது திமுக. இந்த ஆட்சி வேறு எங்கும் பார்த்தது கிடையாது.
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறாத துறைகளே இல்லை. நான்கு ஆண்டுகளாக ஸ்டாலின் ஆட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தில் 46 பிரச்சனைகளை கண்டறிந்து உள்ளதாகவும், இந்த பிரச்சனையை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று தீர்ப்பார்களா, ஏழு மாதத்தில் இந்த பிரச்சனைகளை தீர்ப்பார்களா? எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களது வாக்குகளை பெறுவதற்காக இந்த நாடகத்தை நடத்தி வருகிறார். அதே அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பாயை விரித்து ஊர் மக்களை அமர வைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை என மனுவாக எழுதி பெட்டி போட்டு சீல் வைத்து வீட்டில் வைத்துக்கொண்டார். அந்தக் குறைகளை தீர்த்தாரா என பல்வேறு பிரச்சனைகளை கோரி மக்களை ஏமாற்றி பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவர் தான் ஸ்டாலின். இதனை மக்கள் உணர வேண்டும்.
521 வாக்குறுதிகளை அளித்தார். அதில் கூட்டுறவுத்துறையில் குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்குவதாகவும், கல்வி கடன் ரத்து செய்வதாகவும், பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். நிறைவேற்ற ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டாலின் திட்டம் என பெயர் வைப்பதில்தான் திமுக திகழ்கிறது.
திமுக கூடாரம் இதனால் காலியாக போகிறது
எந்த ஒரு செயல் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இதுகுறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், இதுவரை கொடுக்கப்படவில்லை. இன்று நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதிக்கு பாதி காங்கிரஸுக்கு 117 சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு வேண்டும் என மாநில பொறுப்பாளர் கிரீஸ் கேட்டுள்ளார். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திமுக கூடாரம் இதனால் காலியாக போகிறது.
திமுக ஆட்சியில் உடல் உறுப்புகளை திருட ஆரம்பித்துவிட்டனர். திமுக எம்.எல்.ஏ நடத்துகின்ற மருத்துவமனையில் உடல் உறுப்புகளை திருடுகின்றனர். கிட்னி முறைகேடு கண்டறியப்பட்டு அந்த மருத்துவமனையில் சோதனை செய்து அந்த சோதனையில் கிட்னி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்ய வேண்டும். ஆனால் நீதிமன்றம் மூலம் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், ஸ்டாலின் ஏன் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார்.தவறு செய்தவர்களை தட்டி கேட்பதுதான் அரசாங்கம். அது அம்மாவின் ஆட்சி அதிமுக ஆட்சி தான். ஒவ்வொரு தீபாவளிக்கும் தாய்மார்களுக்கு சேலை வழங்கப்படும். புதிதாக ஆட்டோக்கள் வழங்குபவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அதிமுக
அதேபோல் வெளிநாட்டில் 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் எந்த தொழிலுக்கும் நிதி வழங்குவதில் இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக ஸ்டாலின் 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என கூறுவது உண்மையா? என கேள்வி எழுப்பிய அவர், ஜெர்மனிக்கு போனது தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக அல்ல, முதலீடு செய்வதற்காகவா என கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உதகையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைத்தது அதிமுக ஆட்சியில் தான். பச்சை தேயிலுக்கு கூடுதலாக இரண்டு ரூபாய் வழங்கியதும் அதிமுக ஆட்சியில் தான். கீர்த்தி பிரகாசபுரம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான். உதகையில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தையும் அமைத்தது அதிமுக. உதவையில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறந்து வைத்தது அதிமுக ஆட்சியில் தான். ஆனால் திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துள்ளது. ஆனால் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. இதனை கண்டித்து அதிமுக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது அண்ணா திமுக ஆட்சிதான்” என தெரிவித்தார்.