K U M U D A M   N E W S

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி

வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி

ஆன்லைன் சூதாட்ட விளம்பர வழக்கு.. ராணா டகுபதிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

திரைத்துறையினர் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்களை விளம்பரப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ராணா டகுபதிக்கு அமலாக்கத்துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

சென்னையில் விதிமீறும் வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இரண்டு மாத காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வர சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்.. காவல்துறையினர் விசாரணை!

கூகுள் மேப்பை ஆப் செய்துவிட்டு, வேறு பாதையில் ஆட்டோ ஓட்டுநருக்கும், பெண் நிர்வாகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மாறி மாறித் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சிறார்கள் பாதுகாப்பு: அரசு மற்றும் தனியார் பராமரிப்பு இல்லங்களில் கண்காணிப்பு தீவிரம்!

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சர் - வைரல் வீடியோ வீடியோகுறித்து அமைச்சர் விளக்கம்!

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக வேளாண் துறை அமைச்சர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி கேம் பதிவிறக்கம் ஆனபோது சில வினாடிகளில் நீக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழப்பு!

பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி மோசடி.. வங்கி இஎம்ஐ மூலம் போலீஸிடம் சிக்கிய மோசடி மன்னன்!

அரசு தொடர்பான வேலைகளையும், சொத்தையும் மீட்டுத் தருவதாகக் கூறி 62.8 லட்சம் மோசடி செய்த மோசடி மன்னன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்த துறவிகளுடன் உறவு.. கோடிக்கணக்கில் பணம் பறித்த பெண்

தாய்லாந்தில் ஒரு இளம் பெண் புத்தத் துறவிகளை தனது வலையில் சிக்கவைத்து கோடிக்கணக்கான பணம் பறித்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டியவர்களையே பணிநீக்கம் செய்யும் திமுக அரசு- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதோடு, அவ்வாறு குற்றம் சாட்டியவர்களையே திமுக அரசு பணிநீக்கம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேர்மைக்கு கிடைத்த பரிசு.. சஸ்பெண்ட் குறித்து DSP சுந்தரேசன் கருத்து!

கார் மறுக்கப்பட்டதாக புகார் அளித்த மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்ட நிலையில், நேர்மைக்கு கிடைத்த பரிசு என சஸ்பெண்ட் குறித்து DSP சுந்தரேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

காவலர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - முதல்வர்

பொதுமக்களிடம் காவல் துறையினர் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக லோக்சபாவில் கண்டனத் தீர்மானம்.. காங்கிரஸ் ஆதரவு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக லோக்சபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்கள் கட்சி எம்.பி.க்கள் தீர்மானத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்… அக்ஷய் குமார் எடுத்த அதிரடி முடிவு!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது திரைப்படங்களில் செய்யும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்காகப் பிரபலமானவர் தற்போது அவர் எடுத்துள்ள மனிதாபிமான முடிவு திரைப்படத் துறையில் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பணமோசடி வழக்கு: நடிகர் நிவின் பாலி விளக்கம்

தன் மீது பதியப்பட்டிருக்கும் மோசடி வழக்கு குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கமளித்துள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி...தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.

‘கமிஷன், கலெக்சன்’.. திமுகவின் தாரக மந்திரம்- இபிஎஸ் விமர்சனம்

“கமிஷன், கலெக்சன் மட்டும்தான் திமுகவின் தாரக மந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கு.. டெய்லர் ராஜா 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதிமன்றம் அனுமதி!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டைலர் ராஜாவைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்த நிலையில் ஐந்து நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது- டிடிவி தினகரன் விமர்சனம்

நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை.. பெற்றோர் செய்த கொடூர செயல்

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை, ஜன்னல் வழியே வீசிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நகை திருட்டு வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசின் திட்டங்கள் நேரிடையாக பொதுமக்களின் இல்லங்களில்.. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்கள் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்