மயிலாடுதுறையில் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். சமூக நீதிக்கான உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, மது, போதைப்பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை உள்ளிட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டி உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் நடைபயணத்தை தொடங்கி பட்டமங்கலத்தெரு வழியாக ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து சின்னக்கடைத்தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது, “திமுக நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. 6 மாதங்களில் வரவுள்ள தேர்தலில் முக்கிய முடிவு எடுக்க வேண்டும். யார் வரவேண்டும் என்பதை விட யார் வரவேண்டாம் என்று முடிவு எடுக்க வேண்டும்.
அமைதியான முறையில் ஆட்சிமாற்றம்
கடந்த 3 தேர்தலில் திமுகவுக்கு வெற்றியை கொடுத்தீர்கள். அவ்வாறு வெற்றி பெற்று தமிழகத்துக்கு என்ன செய்தார்கள்?. துரோகம், பொய்யை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. அதை முதல்வர் ஸ்டாலின் உடைத்துக்கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் 63 சதவீத மக்கள் விவசாயிகள். ஆனால் அதிக வறுமையில் வாடும் மக்களாக அவர்கள் உள்ளனர். முதலமைச்சருக்கும் வேறு எந்த துறைகளுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் டாஸ்மாக், போதைப்பொருள் விற்பனை, மணல் கொள்ளை போன்றவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது. முதலிடத்தில் இருந்த பஞ்சாப் மாநிலத்தை விட தற்போது தமிழகத்தில்தான் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு திமுக ஆட்சிதான் காரணம்.
அடுத்த தலைமுறை நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அடுத்து திமுக ஆட்சிக்கு வராது. ஒருவேளை வந்துவிட்டால் மக்களை காப்பாற்ற முடியாது. பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்க வேண்டும். இலங்கை, பங்களாதேஷ், நேபாளத்தில் நடைபெற்றது போன்று தமிழகத்தில் உங்களால் வன்முறையின்றி அமைதியான முறையில் ஆட்சிமாற்றம் நடைபெற வேண்டும்.
பொய்யான வாக்குறுதிகள்
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கப்படுகிறது. பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை இங்கு கொண்டுவர திமுக அரசு திட்டமிட்டது. அதனை தனியாக எதிர்த்து ரத்து செய்ய வைத்தேன். ஆனால் நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விவசாய மண்ணை அழித்து தொழிற்சாலைகள் வேண்டாம். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஆக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்து, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அறிவிக்க செய்தேன்.
நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் ஒரு நீர் பாசன திட்டம் கூட கொண்டுவரப்படவில்லை. மணல் கொள்ளையில் ஈடுபட முடியாது என்பதால்தான் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட திமுக அரசு தயங்குகிறது. 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் என 13 விழுக்காடு மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட 56 வாக்குறுதிகளில் 8 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றியுள்ளனர். இவ்வாறு பெயில் ஆன திமுக மீண்டும் ஆட்சிக்கு வரலாமா? . தேர்தலுக்கு முன்பு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.
சமூக நீதியின் துரோகி
திமுக ஆட்சியில் பொய்யை பத்து முறை முறை சொல்லி உண்மை என்று பொய்யை மக்களிடம் நிரூபிப்பதாகவும், ஸ்டாலின் தினமும் காலை 2 மணி நேரம் சூட்டிங் வருவதாகவும். இதுதான் தமிழ்நாட்டின் நிர்வாகம் மற்றும் தலையெழுத்து என தெரிவித்தார். இதனை மக்கள் மாற்ற வேண்டும். திமுக ஆட்சி கோயபல்ஸ் ஆட்சியாக உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி நிர்வாகத்தில் என்ன நடக்கிறதே என்றே தெரியவில்லை. தமிழகத்தின் தலை எழுத்தை மக்கள்தான் மாற்ற வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என விவசாயிகளின் காலைப் பிடித்து கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகளுக்கு நேர் எதிராக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின். விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட கட்சியாக பாமக இருக்கிறது.
தமிழகத்தில் 60 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் மாற்று பயன்பாட்டுக்கு சென்றுவிட்டது. தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படவில்லை. தமது ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வராத ஆட்சியாக இந்த திமுக ஆட்சி உள்ளது. சமூகநீதிகான நடவடிக்கையை ஒன்று கூட எடுக்கவில்லை. திமுகவுக்கும், சமூக நீதிக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. சமூக நீதியின் துரோகியாக ஸ்டாலின் உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மோசமான திமுக ஆட்சியை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றார். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.