K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

வழிப்பறி வழக்கில் கைதான அரசு அதிகாரிகள்.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

சென்னையில் முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழங்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை-  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு தான் சிலை வைக்கிறரே தவிர அண்ணாவின் பெயரை எதற்கும் வைக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி மனு.. அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெண்களை விடாமல் துரத்திய கார்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் துரத்திய சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வாணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் உயிரை பறிக்க சதி.. பெண் அதிகாரி புகார்

கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடந்திருக்குமோ? என்ற அடிப்படையில் புகார் அளித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தொடக்க விழா.. பேச்சும் இல்லை, எழுச்சியும் இல்லை.. விஜய் தயங்குவது ஏன்?

தமிழக வெற்றிக் கழக தொடக்க விழாவில் விஜய் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பேசுவதை தவிர்த்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதத்தால் நண்பரை கொலை செய்த கொடூரம்.. மதுபான கடை முன்பு தூக்கி வீசப்பட்ட தலை

மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் அல்ல.. ஈசிஆர் சம்பவத்தில் கைதான சந்துரு வீடியோ

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் காரில் சென்ற இளம் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு என்பவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழிப்பறி வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் முக்கிய அரசு அதிகாரிகள்.. மேலும் ஒரு வழக்குப் பதிவு

சென்னையில் தொடர் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று நபர்கள், காவல்துறை அதிகாரிகள் இரண்டு நபர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் வணிகவரித்துறை அதிகாரிகள் இருவர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டம்.. ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்- ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைப்பதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தவெக.. கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய், கொள்கைத் தலைவர்கள் சிலையை திறைந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்.. வலிமை இல்லாமல் தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்- மு.க.ஸ்டாலின்

கழக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ஈசிஆர் சம்பவம்... பெண்களை துரத்திய கும்பல்... முக்கிய குற்றவாளி கைது...

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, இளைஞர்கள் சிலர் துரத்தி சென்று அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடி அருகே கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கோல் போஸ்ட் தலை மீது விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நித்தியானந்தா-பிரேமானந்தா என்றாலே பிரச்சனைதான்.. உயர் நீதிமன்றம் கருத்து

நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் நித்தியானந்தா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா- நிர்மல் குமார்.. விஜயின் திட்டம் என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தனர்.

பெரியார் விவகாரம்: சீமான் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்- ஜெயக்குமார் எச்சரிக்கை

பெரியார் குறித்து பேசுவதை சீமான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்- உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழக உள்துறை அமைச்சர் தீரஜ் குமார் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அம்பேத்கரை அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து போராட்டம்- செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத்தில் அமித்ஷா, அம்பேத்கரை இழிவுப்படுத்தி பேசிய நிலையில் விமானநிலையத்தில் கருப்புக்கொடி காட்ட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு..? விஜய் போடும் மாஸ்டர் பிளான்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பிப்ரவரி 2-ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை.. 15 நாட்கள் நடைபெறவுள்ளதாக மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் தொழுநோய் பாதிப்பு அதிகம் உள்ள 133 வட்டாரங்கள் 27 நகர்பகுதிகளில் உள்ள 50 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் உள்ள 2 கோடி பேருக்கு வரும் 13-ஆம் தேதி முதல் முதல் 28-ஆம் தேதி வரை 15 நாட்கள் வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அதிர வைத்த ஈசிஆர் சம்பவம்.. தாம்பரத்தில் கார்கள் பறிமுதல்

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை துரத்தி சென்ற திமுக கொடி பொருந்திய இரண்டு கார்களை தாம்பரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டங்ஸ்டன் ஏலம் ரத்து..  கிஷன் ரெட்டி-அண்ணாமலைக்கு வரவேற்பு.. ஏமாற்றத்துடன் சென்ற விவசாயிகள்

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விவசாயிகள் வழங்கிய காய்கறி சீர்வரிசைகளை வாங்காமல் சென்றாதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

தவெக மாவட்ட செயலாளருக்கு தடபுடல் வரவேற்பு.. கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள்

புதிதாக நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு-விற்கு தவெக தொண்டர்கள் வரவேற்பளித்த நிலையில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஆர்டர்லி முறை.. தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.