கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “பொள்ளாச்சியில் நடைபெற்ற, உடுமலை ராதாகிருஷ்ணன் குடும்ப விழாவில் கலந்து கொண்டு வந்து இருக்கிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு பினாமிகளின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டினுடைய ஆட்சியை நடத்துவது முதலமைச்சரா அல்லது இந்த தம்பிகளா ? என்பது பொதுமக்கள் இடத்தில் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தை சுரண்டுகிறார்கள்
முதலில் இந்த தம்பிகள் யார்? இவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது யார்? அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் அளவுக்கு ஒரு அதிகாரம் மிக்கவர்களாக அவர்கள் எந்த தைரியத்தில் வலம் வருகிறார்கள்? அதிகாரிகளுக்கு கட்டளையிடும் அளவிற்கு ஒரு பவர் சென்டராக இருந்து ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கிறதா? என்பதை மறந்து விடும் அளவிற்கு இன்றைக்கு இந்த தம்பிகள் தமிழகத்தை சுரண்டி கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய நிதியை எல்லாம் ஊழல் செய்து, அந்த நிதியை எல்லாம் தங்களுடைய சொந்த லாபத்திற்கு பயன்படுத்துகின்ற இந்த தம்பிகளுக்கும், திமுக குடும்பத்திற்கும் என்ன தொடர்பு அவர்களை இயக்குவது யார் அப்படியே தொடர்பு இல்லை என்றால், இந்நேரம் முதலமைச்சர்.அதை வெளியில் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா என்றார்.ரித்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் யார் என்று எங்களுக்கு தெரியாது என்று அவர்கள் கூறி இருக்க வேண்டும் அல்லவா? இவர்கள் மட்டும் தம்பிகளில் அல்ல கிட்டத்தட்ட 15 தம்பிகள் இருக்கிறார்கள். கார்த்திக் என்ற பெயரிலேயே மூன்று தம்பிகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
வெட்கப்பட வேண்டிய ஆட்சி
இவர்களெல்லாம் பின்பக்கம் இருந்து கொண்டு மக்களுடைய பணத்தை சுரண்டிக்கொண்டு வளர்ச்சி திட்டங்களுக்கு ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை எல்லாம் கொள்ளை அடித்து, ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிற இந்த தம்பிகள் யார் ? தொடர்பு என்ன என்பதை தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக விளக்க வேண்டும்.
அதேபோல உதயநிதி ஸ்டாலின் நேற்றைய முன்தினம் புதுக்கோட்டைக்கு சென்றார். அப்பொழுது திருமாவளவனும் சென்று புதுக்கோட்டையில் அம்பேத்கரின் சிலையை திறந்து வைத்து உள்ளனர். சிலையை திறந்தது மிகவும் நல்லது. அப்படியே சிறிது தூரம் சென்று வேங்கை வயலை பார்த்து வந்து இருந்தால் நல்லது, சந்தோஷப்பட்டு இருப்போம். அங்கு இருக்கும் மக்களை சந்தித்து ஆறுதலாவது கூறிவிட்டு வந்து இருக்கலாம்.
அதேபோல அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு நியாயம் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி வழக்கில் எப்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதோ, உடனடியாக தண்டனை பெற்று தரப்பட்டு இருக்கிறது.அதேபோல அரக்கோணம் வழக்கையும் சி.பி.ஐ.யிடம் கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் பின்னணியில் இருக்கிற சார்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் சார்கள் மற்றும் தம்பிகளின் ஆட்சி தான் நடந்து கொண்டு இருக்கிறது.இது எல்லாம் வெட்கப்பட வேண்டிய ஆட்சி.
மக்கள் விரும்புகிற கூட்டணி
அதே போல கடந்த நான்கு ஆண்டுகளாக டெல்லியின் பக்கமே செல்லாதவர். தற்போது முதல்வர் டெல்லி சென்று இருக்கிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.கடந்த நான்கு வருடங்களாக சென்று வந்து இருந்தால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய வளர்ச்சி நிதிகளை பெற்று இருக்கலாம். இன்னும் தமிழ்நாடு வேகமாக முன்னேறி இருக்கும். கடைசியில் ஆட்சி முடியும் நேரத்தில் சென்று, அரசியல் செய்வதற்காக அங்கே சென்று இருப்பதாக அனைவரும் பார்க்கிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்கு கூட அவர் டெல்லி செல்லவில்லை. பொதுவாக நடக்கும் விஷயங்களை கூட இங்கு அரசியலாகி விளையாண்டு கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றியோ? மேம்பாட்டை பற்றியோ ? கடந்த மூன்று வருடங்களாக எந்த கவலையும் படவில்லை. Foxcon நிறுவனம் தமிழகத்திற்கு வர வேண்டிய நிறுவனம். ஆனால் அந்த நிறுவனம் இங்கு வருவதற்கு பதிலாக உத்தரப்பிரதேசத்திற்கு சென்று உள்ளது.இவர்களுடைய செயல்திறன் அற்ற தன்மையினாலே, அனைத்தும் கைதவறி போய்விட்டது. இதனால் தமிழ்நாட்டின் வருமான, வளர்ச்சி அனைத்தும் போய்விட்டது என்று கூறினார். பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.கவின் கூட்டணி, தி.மு.க கூட்டணியை விரட்டி அடிக்கின்ற ஒரு கூட்டணி. தி.மு.க என்ற ஒரு ஊழல் பெருச்சாளியை வீட்டிற்கு அனுப்புவதற்காக மக்கள் விரும்புகின்ற கூட்டணியாக இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது.
தமிழக மக்கள் மீது பற்று
எடப்பாடி பழனிசாமி நான்கு வருடம் டெல்லிக்கு செல்லாதவர், தன்னுடைய மகனை காப்பாற்றுவதற்காக சென்று இருக்கிறார் எனக்கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, ஆம் தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி நான்கு வருடம் சிந்திக்கவே இல்லை. இப்போது ஆட்சி முடிய போகும் நேரத்தில், இது ஒரு அரசியல் ஸ்டண்ட் எடுத்துக்கொண்டு சென்று இருக்கிறார். கடைசி நேரத்தில்யாவது அவர் மத்திய அரசோடு பேச சென்று இருக்கிறாரே என்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இதை நான்கு வருடத்திற்கு முன்னே செய்து இருக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தின் வரலாற்றை மறைப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்கிறது எனக்கு கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு, கடந்த நான்கு வருடங்களாக தி.மு.க மத்திய அரசாங்கத்தை எந்த விதத்தில் குறை சொல்லலாம் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டது. நீங்கள் கீழடி அகழாராய்வு அறிக்கையை பார்த்தால் தெரியும். தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்கள் மீது அதீத பற்று கொண்டு இருப்பவர் மோடி.
யாரையும் மிரட்ட வேண்டிய அவசியமில்லை
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் 12 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக விமான நிலையங்களுக்கு எவ்வளவு ? பணம் ஒதுக்கி இருக்கிறார்கள் என யோசித்துப் பாருங்கள். தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் அதிகமான வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றால் மத்திய அரசு கொடுத்த பணம் தான்.திருக்குறளை கிட்டத்தட்ட 35 மொழிகளில் மொழிபெயர்ப்பு உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார். திருவள்ளுவருக்கு வெளிநாடுகளில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று சொன்னதோடு, மட்டுமல்லாமல் உடனடியாக கலாச்சார மையங்களை அமைத்துக் கொண்டு இருக்கிறோம். பாரதியாருக்கு பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில், பாரதியார் பெயரில் இருக்கை அமைத்து இருக்கிறோம். காபி தமிழ் சங்கம் நடத்தி இருக்கிறோம்.
உண்மையாகவே தமிழ் கலாச்சாரத்திற்கு அதிக பெருமை சேர்ப்பது மோடி அரசாங்கம் தான். ஐநா சபையில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனக் கூறி புலம்பிய ஒரே பிரதமர் மோடி தான் என்று கூறினார்.உதயநிதி மோடிக்கும் பயப்பட மாட்டோம் E.Dக்கும் பயப்பட மாட்டோம் எனக் கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, நாங்கள் யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை, பாரதிய ஜனதா கட்சி உலகத்தில் மிகப்பெரிய கட்சி, உலகத்திலேயே அதிக உறுப்பினர்களை கொண்டு இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்தியா முழுமைக்கும் திட்டத்த 80 சதவீதத்திற்கும் மேற்பட்டு ஆட்சி செய்து கொண்டு இருக்கிறோம். மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. நாங்கள் யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். ஆப்ரேஷன் சிந்து ஒவ்வொரு இந்தியனுக்கும், ஒவ்வொரு ராணுவத்திற்கும், மாபெரும் வெற்றியாக பார்க்க வேண்டும்” என கூறினார்.