சென்னை கோடம்பாக்கம் புலியூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது சகோதரர் எபனேசர். சசிகுமாரின் தாயாரின் இரண்டாவது கணவர் சேகர். எபனேசர் அவரது தாயாரின் முதல் கணவரின் மகன் ஆவார். முதல் கணவர் பிரிந்து சென்ற நிலையில் அவரது தாயார் சேகர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
சொத்து பிரச்னை
சசிகுமார் மற்றும் அவரது தாயாரான சாந்தி என்பவர் இரண்டு நபர்களையும் பாகுபாடுடன் நடத்தி வருவதாகவும், சசிகுமார் அக்கறையுடன் பார்த்துக் கொள்வதாகவும் எபனேசர் பற்றி எந்த கவலையும் இன்றி இருந்து வருவதால் அடிக்கடி குடும்பத்தில் பிரசனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள இடத்தை விற்பனை செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடந்தபோது, எபனேசர் தனக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து விடும் படியும் தான் குடும்பத்துடன் வாடகை வீட்டிற்கு செல்வதாக கூறிய நிலையில், சசிகுமார் பணம் கொடுக்க முடியாது என்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கத்திக்குத்து
இருவரும் மது அருந்து சென்ற நிலையில், எபனேசர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சசிகுமாரை வெட்டி விட்டு ஓடி விட்டார். காயம் ஏற்பட்ட நபரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வடபழனி போலீசார் தப்பி ஓடிய எபனேசரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.