நீலகிரி மாவட்டத்தில் வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கையாக கனமழைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைய, முத்தோரை, பாலடா மற்றும் அதன் சுற்றுப்புற மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடையறாத கனமழை பெய்துவருகிறது.
இந்த கனமழையின் தாக்கமாக, குறைந்த வடிகால் வசதியால் மலைப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள முக்கிய மலைக்காய்கறிகளான கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் போன்றவை மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இதனால் மழை காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் மழையையும் பொருட்படுத்தாமல் கனமழையிலும் மலைக்காய்கறி பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 21.5 செமீ மழை பதிவாகி உள்ளது.
தொடர்ந்து இன்று காலை முதலே காலநிலையில் மாற்றம் ஏற்ப்பட்டு மாவட்டத்தில் உதகை,முத்தோரை பாலடா,நஞ்சநாடு,இத்தலார்,எமரால்டு,எடக்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழையும்,மிதமான மழையும் பெய்து வருகிறது.
கனமழை காரணமாக முத்தோரை பாலடா, நஞ்சநாடு, இத்தலார், எமரால்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலை காய்கறிகளான கேரட்,பீட்ரூட்,மலைப்பூண்டு பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவிலான மலைக்காய்கறி பயிர்கள் சேதமடைந்துள்ளது.
தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மேற்கொண்டு மலைப்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடையும் முன்பு அதனை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மலையின் தாக்கத்தால் பொதுமக்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகைபுரிந்துள்ள சுற்றுலா பயணிகள் வீடுகள் மற்றும் விடுதிகளிலேயே முடங்கி கிடக்க கூடிய சூழல் உருவாகியுள்ளது.