நடிகைகளின் முகத்தை பயன்படுத்தி மார்பிங் செய்து ஆபாசமாக வீடியோக்கள் வெளியாகும் சர்ச்சை என்பது பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. தொழில்நுட்பம் வளர வளர உண்மை என நம்பும் வகையில் Artificial Intelligence தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரவி வருகின்றன. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை ஒருவரின் ஆபாச வீடியோ வெளி வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதுவும் போலியான வீடியோ என்றும் நடிகையின் தரப்பில் கூறப்பட்டது.
இந்த சர்ச்சை முடிவதற்குள் மீண்டும் பிரபல நடிகையின் ஆபாச வீடியோ வெளியானதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில் தான் ஜெமினி, அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான கதாநாயகி கிரண் ரத்தோர். சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் முகத்தை பயன்படுத்தி ஆபாசமாக மார்ஃபிங் செய்து போலி ஆபாச வீடியோ வெளியானதாக குற்றம் சாட்டியுள்ளார். மார்பிங் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட வீடியோவை பரப்புவதன் மூலம் தான் பாதிக்கப்படுவதாகவும் தனது தனிமை, வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். தன்னுடைய போலி ஆபாச வீடியோவை பரப்புவது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நடிகை கிரண் தெரிவித்துள்ளார்.
உண்மையோ, பொய்யோ ஆபாச வீடியோவை ஷேர் மற்றும் டவுன்லோட் செய்து பரப்புவது சட்டப்படி குற்றம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புடன் செயல்படுமாறும் வீடியோ வந்தால் புகார் அளிக்கும்படியும் யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் நடிகை கிரண் தெரிவித்துள்ளார். இதுபோன்று மார்பிங் வீடியோவின் ஆபத்து குறித்தும் சைபர் க்ரைம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். நடிகை கிரண் சமூக வலைதளத்தில் மூலமாக வெளியிட்ட எச்சரிக்கை பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.