மதுரை உலக தமிழ்சங்க கூட்டரங்கில் கவிஞர் வைரமுத்துவின் வெற்றிதமிழர் பேரவையின் மறுசீரமைப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் வெற்றி தமிழர் பேரவையின் உறுப்பினர்களான வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு கவிஞர் வைரமுத்து சால்வை அணிவித்து வாழ்த்தினார். இதனை தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் வைரமுத்து பேசியதாவது,
2 மலையாளிகள் சந்தித்தால் டீ கடை உருவாகிறது. இரு தமிழர்கள் சந்தித்து கொண்டால் முதலில் சந்தித்து கொள்ளட்டும் எத்தனை Police Station உருவாகிறது என்று சொல்வார்கள் அந்த அளவிற்கு தமிழர்கள் ஒற்றுமையில்லாத நிலையில் இங்கு அனைவரும் தமிழர்களாக ஒன்று கூடியுள்ளனர்.
சமூகத்தின் வளம் மனிதவளத்தை சீரழிக்கும் மதுவை வாழ்நாளில் இனி மது, புகை இரண்டையும் தொடுவதில்லை என உறுப்பினர்கள் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறினார் அப்போது எழுந்து நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மது முதலில் குடும்பத்தை கெடுக்க தொடங்கி உங்கள் தாயை கூட மதிக்காதவனாக மாற்றிவிடும், தாய் கூட மது அருந்திய மகனை மன்னிக்கமாட்டாள் எனவும், வெற்றிதமிழர் பேரவை உறுப்பினர் என்பதால் பெண் கொடுக்க கூட யோசிக்கமாட்டார்கள் என்பது போன்ற நம்பிக்கையை உருவாக்குங்கள் என்றார்.
ஏராளமான அஞ்சல்அட்டை கவிஞர்கள் கவிதை எழுதி அனுப்பிவைத்தனர் அதனை பார்த்து வியப்படைந்தேன். அதில் சிலர் எழுதிய கல்லறை குறித்த கவிதைகளில், தண்ணீரில் மிதந்தவன் தண்ணீரில் மூழ்கிவிட்டான் எனவும், தொழிலாளரின் கல்லறையில் இங்கும் கூட இங்கு கரையான்களால் சுரண்டப்படுகிறான் எனவும், விலைமாதுவின் கல்லறையில் இங்குதான் இவள் தனியாக தூங்குகிறாள் எனவும், நடிகையின் கல்லறையில் தயவுசெய்து திறந்துபார்த்துவிடாதீர் மேக்அப் இல்லாமல் தூங்குகிறாள் எனவும், அரசியல்வாதி கல்லறை குறித்து எழுதியிருந்தார்கள் அது விமர்சனம் ஆகுமோ என நினைத்தேன்
ஆனால், விமர்சனத்திற்கு உள்ளாகுவது தான் சிறந்தது. ஊர் விமர்சித்தால் வளர்கிறோம் என அர்த்தம், சொந்தங்கள் பரிகாசித்தால் நீங்கள் வளர்கிறீர்கள் என அர்த்தம்்எல்லோரும் உங்களை எள்ளி நகையாடினால் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என அர்த்தம், விமர்சனத்தை தூக்கி எறியுங்கள்.
அறத்திற்கு உறுதியானதை எப்போதும் செய்ய வேண்டும். அதையே செய்யுங்கள் விமர்சனத்தை தூக்கியெறிய வேண்டும் என்றார்
திறந்துபார்த்து விடாதீர்கள் மேக்அப் இல்லாமல் தூங்குகிறாள் என நடிகையின் கல்லறையில் எழுதியிருந்த அஞ்சல் அட்டை கவிஞர்களின் கவிதை வியக்கவைத்தது. அரசியல்வாதியின் கல்லறையில், தயவுசெய்து யாரும் கைதட்டி விடாதீர்கள் எழுந்து விடப்போகிறார் என கவிதை எழுதியிருந்த்தாகவும் தெரிவித்தார். அரசியல்வாதிகளுக்கு கைதட்டல்கள் தான் சங்கீதம் போன்றது என்றார்.
திருவள்ளுவரை தமிழர்களின் அடையாளமாக கருதுங்கள் எனவும். திருவள்ளுவர் தமிழர்களின் ஞான தந்தை, தமிழர்களின் நாகரீகம் என்னவென கேட்டால் திருக்குறள் என சொல்லுங்கள் என்றார். மனிதவளத்தை சீரழிக்கும் மதுவையும், புகையையும் இனி மேல் தொடமாட்டோம் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள் என இளைஞர்களுக்கு வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார்.