K U M U D A M   N E W S

போலீசார்

சென்னையில் நகை வியாபாரி கடத்தல்.. ரூ.31 லட்சம் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!

சென்னையில் நகை வியாபாரியை கடத்திச் சென்று ரூ. 31 லட்சம், தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நம்பர் ப்ளேட்டை மாற்றி, வாகனத்தில் HEALTH டிப்பார்ட்மண்ட் ஸ்டிக்கர் வைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஷ்ணு மற்றும் அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி வழக்கு – மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு.. நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படைகள் அமைத்து தேடிவந்த காவல்துறையினர் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூ செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது!

கொடைரோடு அருகே மாவூத்தான் பட்டியில், வீட்டு தோட்டத்தில் உள்ள பூச்செடிகளுக்கிடையே மறைவாக கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயியை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர் பலி.. ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காருக்கு அடியில் சிக்கிய நபர் உயிரிழந்தது தொடர்பாக ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்க நபர்.. காப்பாற்றிய தமிழக சைபர் கிரைம் போலீசார்!

சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

வாகன விபத்து: சிறுமி மீது ஏறி இறங்கிய லாரி.. தாய் கண்முன்னே உயிரிழந்த மகள்!

தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுமி மீது, தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேய பரிதாமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிமுக அலுவலத்தில் தாக்குதல்.. மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை

தீயணைப்புத்துறை வீரர் என்று கூறி மதிமுக அலுவலகத்திற்குள் சென்று பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபரை பிடித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரபல தனியார் வங்கியில் ரூ. 4.36 கோடி மோசடி: நிர்வாக இயக்குனர், மேலாளர் மீதுவழக்குப்பதிவு..!

பிரபல தனியார் வங்கியில், வைப்பு நிதியாக வைக்கப்பட்ட ரூ. 4.36 கோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் வங்கி மேலாளர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மெட்ரோ தண்டவாள டிராக் விழுந்து விபத்து.. போலீசார் வழக்கு பதிவு..!

சென்னை மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் நடந்து வரும் போது, ராமாபுரம் பகுதியில் தூண் விழுந்து ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

2-வது மாடியிலிருந்து குழந்தையை வீசிக் கொன்ற கொடூரம்.. தாய் கைது

இரட்டை பெண் குழந்தைகளின் அழுகையால் தூக்கமின்றி தவித்த தாய் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டின் 2வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணையாக கிட்னியை கேட்ட மாமியார்.. மருமகள் அதிர்ச்சி

வரதட்சணையாக பைக், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய மாமியார் வற்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாக சென்ற கார்.. சினிமா பணியில் துரத்திய போலீசார்

செய்யாறு அருகே தடுப்புகளை மோதிவிட்டு அதிவேகமாக சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்க டாலரில் முதலீடு அதிக லாபம் என ஆசைவார்த்தை ரூ.6.88 லட்சம் மோசடி... 2 பேர் கைது

டாலரில் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 6.88 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.61 லட்சம் மோசடி.. 2 பேர் கைது!

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!

போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி 1.65 கோடி மோசடி.. தலைமறைவாக இருந்தவர் கைது!

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கு.. 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொள்ளையன்!

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை, 21 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

நடுவழியில் சாமியை நிறுத்தம்.. மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது சாமியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வடகலை - தென்கலை பிரிவினர் மோதிக்கொண்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வடபழனியில் நகை வியாபாரியை கட்டிப் போட்டு நகை கொள்ளை!

சென்னை வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்த போலீசார், 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

விஜய் கோவை வருகை...த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.