Breaking news

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டி போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் உதவியுடன் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை
ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் 4 நாட்கள் பயணமாக ஜூலை 2ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி

விதிகளின் படி புதிய ஆளுநர் பதவியேற்கும் வரை, ஏற்கனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இதனிடையே தமிழக அரசுக்குக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருவதால் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்.

கடந்த மாதம் 26ம் தேதி ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றார். அதைத்தொடர்ந்து இந்த மாதம் ஜூலை 2ம் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

வெடிகுண்டு மிரட்டல்

இந்த நிலையில் தான் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை, கேம்ப் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தகவல் அறிந்த கிண்டி போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் உதவியுடன் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.