தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி.. எஸ்.பி.வேலுமணி
“தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
“திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவளக் கொள்ளை மட்டும் தான்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக தேர்தல் பிரசாரம் என்பது மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தியே இருக்கும் என காயத்ரி ரகுராம் பேச்சு
குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தாலும், என் வழி தனி வழி என பயணித்துக் கொண்டிருந்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை ஆற்றிய உரை பாஜக-வினரை மட்டுமல்லாது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்தும் செயலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடர்ந்து ஈடுபட்டால், அவரால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.
மதவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சரின் வாக்குமூலம் குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்தபடி கூறுவதுதான் அரைவேக்காட்டுத் தானம் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அதிமுக முக்கியப் புள்ளியை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாம் திமுக தலைமை. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே பிளான் போடத் தொடங்கியுள்ள திமுகவின் யுக்தி பலனளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது தொடர் போராட்டத்தால் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக வசமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டையும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி கூட்டணிக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ராஜ்யசபா சீட்டும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதால், தேமுதிகவின் நிலை என்ன? விரைவில் தெரியவரும்.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு எடுத்த சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்று திராவிட கழக தலைவர் கீ. வீரமணி தெரிவித்துள்ளார்.