K U M U D A M   N E W S

தமிழ்

தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

விஜய் பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

விஜய்யின் ‘கோட்’ பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை.!

அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது

Vairamuthu: ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.. வைரமுத்து ஆதங்கம்

தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் படத்தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டு தலைப்புகள் வைப்பது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்றும் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் சிறு குறு வியாபாரிகளுக்கு பாதிப்பு.. ராஜேந்திரன் பேட்டி

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வந்தால் இது சிறு குறு தொழிலை பாதிக்கும் எனவும் மத்திய அரசின் நிர்பந்தத்தால் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக சிஐடியு மாநில செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

சூர்யாவின் ‘வாடிவாசல்’ கைவிடப்படுகிறதா? – தயாரிப்பாளர் பதில்

வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்

அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா? – ராமதாஸ் பதில்

குருமூர்த்தி பேசியது தொடர்பாக ரகசியமாக காதில் கூறுகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்

மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் மயங்கி விட மாட்டார்கள்- திருமாவளவன்

பாஜகவின் மதவாத அரசியலுக்கு பிற மாநில மக்கள் மயங்கி விடுவதுபோல், தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விடமாட்டார்கள் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து

தக் லைஃப் படத்தில் சாதிபெயர் நீக்கம்-விமர்சனம் எழுந்ததால் நடவடிக்கை

தக் லைஃப் முன்னோட்ட வீடியோவில் இடம் பெற்ற சாதிப்பெயரை படக்குழு நீக்கியுள்ளனர்

"புலி வருது, புலி வருது".. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்

தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக-திமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் பொருத்தமானவர் - இயக்குநர் மணிரத்னம்

தக் லைஃப் திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் தான் மிகவும் பொருத்தமான நடிகர் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது என்றும், இதனால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிரபல மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா..?

நடிகர் சூர்யா 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

ரவுடியிச தடுப்பு நடவடிக்கை.. 150 ரவுடிகளுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு வழக்குகளில் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட 150 ரவுடிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை பெற்று தந்ததாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

'பென்ஸ்' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்? நாளை வெளியாகும் அப்டேட்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

டபுள் ஹீரோ கதையில் இணையும் ரவி மோகன்- எஸ்.ஜே.சூர்யா.. ரசிகர்கள் உற்சாகம்!

கார்த்திக் யோகி இயக்கும் டபுள் ஹீரோ படத்தில் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஓடிடியில் வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி

நடிகர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

பள்ளிகள் இன்று திறப்பு: விமான கட்டணம் அதிரடியாக உயர்வு

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணங்கள் உயர்வு

Schools Reopen: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து, தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

மதயானைக் கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? – ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்

தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு சீக்ரெட் பயணம்..! டெல்லி தலைமைக்கே தெரியாத ரகசியம்..! தனி ரூட் எடுக்கும் அண்ணாமலை..?

தமிழக பாஜக தலைவராக நயினார் நியமிக்கப்பட்டதில் இருந்தே அண்ணாமலையின் மவுசு கட்சியில் குறையத் தொடங்கியதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது, எனவே, அவர் தனக்கான தனி ரூட்டை எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் டெல்லி தலைமை கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திலகபாமா நீக்கமா? நீடிப்பாரா? யார் தான் பாமக பொருளாளர்? குழப்பத்தில் தொண்டர்கள்!

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். நிறுவனரும், தலைவரும் மாறி, மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பாமகவின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.