பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப மத்திய அரசின் விதிப்படி வருமான வரி செலுத்த வேண்டும் ஏற்கனவே ஏழு லட்சம்வரை வருமான வரம்புச் சலுகை என்ற நிலை கடந்த பட்ஜெட் ஒன்றிய அரசு அறிவித்ததன் மூலம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரம்புச்சலுகை அதிகரித்துள்ளது. 12 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் அதற்கு ஏற்றச் சதவீத வருமான வரியைச் செலுத்த வேண்டும் மேலும் வருமான வரி கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.
அதில் வரி விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருமான வரி திரும்பப் பெறவும் முடியும். அந்த அடிப்படையில் வீட்டுக் கடன் வீட்டு வாடகை முதலீடு பாலிசிகள் உள்ளிட்டவற்றை காட்டி வரி விலக்கு பெறவும் முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் போலியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்து பெருமளவில் வருமான வரி தொகை திரும்பப் பெற்றுள்ளதாக வருமான வரி புலனாய்வு பிரிவு கண்டு பிடித்துள்ளது. குறிப்பாக வருமான வரி செலுத்துபவர்கள் சார்டட் அக்கவுண்ட்ஸ் மற்றும் தரகர்கள், ஊழியர்கள் ஆகியோர் இந்த வருமான வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரி புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
போலியான நன்கொடை ரசீதுகள், போலியாக மருத்துவச் செலவைத் திரும்பப் பெற விண்ணப்பித்தல், போலியான வீட்டு வரி ஒப்பந்தங்கள், முறைகேடான உள்ள வரி விலக்குள்ள படிகள் ஆகியவற்றை காட்டி இந்த வரி மோசடி நடந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாது என்பது 80 ஜிஜிசி என்ற பிரிவின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தது போன்று போலியான ரசீதுகளை காட்டி நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வரி சலுகை பெற்றது தெரியவந்துள்ளது. மேலும் போலி நன்கொடை ரசீதுகள் கணினிகளில் மாற்றப்பட்டு பல்வேறு பான் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் போலியாகப் பிரிவு 80e அடிப்படையில் உயர் கல்விக் கடன் வட்டி செலுத்துவது போன்று போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து வரி மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.
வருமான வரி தொடர்பான ஆலோசகர்கள் போலியான வீட்டு வாடகை ரசீதுகளை வீட்டு உரிமையாளர்கள் பெயரில் தயாரித்து வீட்டு வாடகை மூலம் வரி ஏய்ப்பு செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் போலியாக மருத்துவச் சான்றிதழ், கட்டண ரசீதுகள் பல்வேறு மருத்துவர்கள் பெயரில் கணினியின் மூலமாக வருமான வரி செலுத்துவோர் தயாரித்து மோசடி செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
80eeb என்ற பிரிவின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது தொடர்பான கடன்களின் வட்டிகளை கணக்கு காட்டி ஊழியர்கள் மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாது 80 g பிரிவிற்கு போலியாக அறக்கட்டளை நிறுவனங்களிடமிருந்து ரசீதுகள் சமர்ப்பித்து மோசடி செய்ததையும் கண்டுபிடித்துள்ளனர். வருமான வரி ஆலோசகர்கள் மூலமாக ஊழியர்கள் மோசடி செய்து 80 சி எனப்படும் போலி முதலீடு ஆவணங்கள் மற்றும் 80 dd என்ற பிரிவின் கீழ் போலி மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள்,80ddb என்ற பிரிவுகீழ் புற்றுநோய், எய்ட்ஸ் பார்க்கின்சன் சின்றோம் போன்ற கடுமையான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்படுவதாகவும் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மோசடி செய்வதாக வருமான வரி புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களான பெல், ஒ எஃப் டி, தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு போக்குவரத்து கார்ப்பரேஷன் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களும், டிவிஎஸ் குளோபல் போன்ற தனியார் நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்கள் வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரி புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் 22,500 பேர் மேலாகப் போலியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அது மட்டும் அல்லாது சுமார் 550 கோடி ரூபாய் வரை போலியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு போலி ஆவணங்கள் மற்றும் போலி ரசீதுகள் கொடுத்து வருமான வரியைத் திரும்பப்பெறும் தொகையின் அளவு 120 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை, சென்னை, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 18 இடங்களில் வருமான வரி / சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வருமான வரி நிபுணர்கள் மற்றும் இடைத்தரகர்கள் பல ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோருக்கு மோசடியான வருமான வரி திரும்பப் பெறுதல் கோரிக்கைகளைச் செய்வதற்கு உதவியதாகவும், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரிகிறது. இத்தகைய முகவர்களைப் பொறுத்தவரை, மோசடியான வருமானக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்காக அவர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் ஐடிகளை உருவாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த மின்னஞ்சல் ஐடிகளிலிருந்து, பல ஆயிரக்கணக்கில் வருமானக் கணக்குகள் தாக்கல் செய்யப்படுவதும், பல கோடி ரூபாய்க்கு போலியான பணத்தைத் திரும்பப் பெறுவதும் நடந்துள்ளது. மேலும் whatsapp மற்றும் டெலிகிராம் குரூப்புகளை உருவாக்கி அதன் மூலமாக இந்த வருமான வரி மோசடிகளைச் சார்ட்டட் அக்கவுண்டுகள் வருமான வரி தரகர்கள் மோசடியில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஆண்டு அல்லது கடந்த ஆண்டுகளில் முறைகேடாகத் தவறான வருமான வரி தாக்கல் செய்த அனைத்து வரி செலுத்துவோரும் தாமாக முன்வந்து புதுப்பிக்கப்பட்ட வருமான வரி, திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை தரப்பில் அறிவுறுத்தியுள்ளனர்.