ஓசூர் பழைய டெம்பிள் அட்கோ பகுதியில் செயல்பட்டு வந்த 06ஆம் நம்பர் நியாய விலை கடை கட்டடம் மிகவும் மோசமாக இருந்ததால் அந்த கடையானது தற்காலிக ஏற்பாடாக உழவர் சந்தை அருகே உள்ள மலர் வணிக வளாகத்தில் அங்குள்ள 14ஆம் நம்பர் கடையில் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் 1550 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக முத்து மாதேவன் என்பவர் உள்ளார்.
கழிவறையில் ரேஷன் அரிசி மூட்டைகள்
இந்த நிலையில் இந்த ரேஷன் கடைக்கு கொண்டுவரப்பட்ட அரிசி மூட்டைகள் மற்றும் ரேஷன் பொருள்கள் இருப்பு வைக்க இடம் இல்லாமல் மலர் வணிக வளாகத்தில் உள்ள கழிவறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாமல் மனித கழிவுகள் கசிந்து வெளியேறி அந்த இடமே கடுமையான துர்நாற்றம் வீசி வந்தது. அந்த இடத்தில் அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டு விநியோகிக்கப்படும் அவல நிலையை பார்த்த பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
அதிகாரிகளுக்கு கோரிக்கை
கழிவறை உள்ளே அரிசி மூட்டைகள் இருக்கிறதா? அதை திறந்து பார்க்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் கேட்டபோது, ரேஷன் கடைக்காரர் அதனை அகற்றி விடுகிறேன் என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார். கழிவறைக்குள் அரிசி மூட்டைகள் இருந்ததை அறிந்த பொதுமக்கள் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.